வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - இரண்டு (தொடர்ச்சி)
வரையறையும் அடிப்படைக்
கொள்கைகளும்
[கோள்கள்]
18. ஒரு குறிப்பிட்ட கோளிலிருந்து 2வது, 12வது, 11வது, 3வது, 10வது, 4வது வீடுகளில் இருக்கும் கோள்கள், அந்த குறிப்பிட்ட கோளிற்கு நண்பர்கள், மற்றவை எதிரிகள் – ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டும். வேறு சிலரின் கூற்றுப்படி, ஒரு உச்ச கோளின் வீட்டில் இருக்கும் கோள்களும் அந்த கோளிற்கு நண்பர்கள். இவற்றை ஒருங்கிணைத்து பார்க்கும்போது, மூன்று இயல் உறவுகள் (பத்தி-16 மற்றும் 17), மற்றும் இரண்டு கால அளவு உறவுகள் ஆகியவற்றை, கோள்களுக்கிடையேயான கீழ்வரும் ஐந்து உறவுகளாகப் பிரிக்கலாம். அவை அதிமித்ரன் (உயர் நண்பன்), மித்ரன் (நண்பன்), சமம் (சரிநிகர்), சத்ரு (எதிரி) மற்றும் அதிசத்ரு (உயர் எதிரி) ஆகும்.
குறிப்புகள்: (சிதம்பரம்)
பத்திகள் 16, 17 இவற்றில் மூன்றினை, நட்பு, சரிநிகர், எதிரி என நிரந்தரமாக குறிப்பிடுப்படுகிறது. பத்தி 18-ல் இரண்டினை, நட்பு மற்றும் எதிரி என தாற்காலிகமாகக் குறிப்பிடுகிறது. இவற்றினை ஒருங்கிணைத்தால், கீழ்வரும் முடிவுகள் கிடைக்கும்.
பத்திகள் 16, 17
|
பத்தி 18
|
முடிவு
|
||
மித்ரன்
|
+
|
மித்ரன்
|
=
|
அதிமித்ரன்
|
சத்ரு
|
+
|
சத்ரு
|
=
|
அதிசத்ரு
|
சமம்
|
+
|
மித்ரன்
|
=
|
மித்ரன்
|
சமம்
|
+
|
சத்ரு
|
=
|
சத்ரு
|
மித்ரன்
|
+
|
சத்ரு
|
=
|
சமம்
|
19. ஒரு கோள் ஸ்தான பலம் (உள் அல்லது இட வலிமை) பெறுவது என்பது, அக்கோள் அதன் உச்ச நிலையில் இருக்கும்போது(1), நண்பனின் வீட்டில்(2) மூலத்திரிகோணத்தில்(3), அதன் நவாம்சத்தில்(4) அல்லது அதன் சொந்த வீட்டில்(5) இருக்கும்போது என்பதாகும்.
புதனும் வியாழனும் கிழக்கில் அல்லது உதய ராசியில் பலம் அதிகம் பெறுவர்(6). சூரியனும் செவ்வாயும் தெற்கில் அல்லது 10ம் வீட்டில் பலம் அதிகம் பெறுவர். சனி மேற்கில் அல்லது மறைவு இராசியிலும், சந்திரனும் வெள்ளியும் வடக்கிலும் அல்லது 4வது வீட்டிலும் பலமிக்கவர்கள்.
குறிப்புகள் (சிதம்பரம்)
(1)
பார்க்க I . 13
(2)
பார்க்க I . 16 - 18
(3)
பார்க்க I . 14
(4)
பார்க்க I . 6
(5)
பார்க்க I . 6
இந்த இடங்களுக்கு தொடர்புடைய உறவுகள் – பத்தி -11 – பகுதி –XX
பார்க்கலாம்.
(6)
அதன்படி: அவை திக் பலம் அடையும். வேறு சில உரையாசிரியர்களின்
கருத்துப்படி, புதனும் வியாழனும் கிழக்கு திரிகோண
இராசிகளில், மேசம், சிம்மம், தனுசு ஆகிய இடங்களில் பலம் அதிகம். சூரியனும் செவ்வாயும்
தெற்கு திரிகோண இராசிகளில், ரிசபம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் பலம் அதிகம். சனி
மேற்கு திரிகோண இராசிகளில், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய இடங்களில் பலம் அதிகம்.
சந்திரனும் வெள்ளியும் வடக்கு திரிகோண இராசிகளில், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய
இடங்களில் பலம் அதிகம். – பகுதி-I, பத்தி-19, குறிப்பு (அ) பார்க்கவும்.
நிமித்திகன்:
(குறிப்புகள்)
உரை ஆசிரியர் (சிதம்பரம்
அவர்கள்), முன் பத்திகளில் சொல்லியவற்றை அவ்வப்போது தொடர்புபடுத்துவதுடன், இனிவரும்
பத்திகளையும் குறிப்பிடுவது மூலம் அவர் பிருகத்
ஜாதகாவினை முழுமையாக கற்றுள்ளதை அறியமுடிகிறது.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
- 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment