தசா ஆண்டுகள்
நாம் ஏற்கனவே பதிவிட்டபடி, ஒவ்வொரு விண்மீனும்
ஒரு கோளிற்கு உரிமை உடையதாக இருக்கிறது. எடுத்துக் காட்டாக, அசுவனி என்பது கேது கோளிற்கும்,
பரணி என்பது வெள்ளி கோளிற்கும் உரிமை உடையது. அதாவது அந்த குறிப்பிட்ட விண்மீன்களுக்கு
குறிப்பிட்ட கோள்கள் அதிபதி என்பதாகும். இதன் அடிப்படையில்தான் நட்சத்திர தசை கணக்கிடப்படுகிறது.
கோள்கள்
|
அக் கோளுக்கு உரிய விண்மீன்கள்
|
தசா ஆண்டுகள்
|
||
கேது
|
அசுவனி
|
மகம்
|
மூலம்
|
7
|
வெள்ளி
|
பரணி
|
பூரம்
|
பூராடம்
|
20
|
சூரியன்
|
கார்த்திகை
|
உத்திரம்
|
உத்திராடம்
|
6
|
சந்திரன்
|
ரோகிணி
|
அஸ்தம்
|
திருவோணம்
|
10
|
செவ்வாய்
|
மிருகசீரிசம்
|
சித்திரை
|
அவிட்டம்
|
7
|
இராகு
|
திருவாதிரை
|
சுவாதி
|
சதயம்
|
18
|
வியாழன்
|
புனர்பூசம்
|
விசாகம்
|
பூரட்டாதி
|
16
|
சனி
|
பூசம்
|
அனுசம்
|
உத்திரட்டாதி
|
19
|
புதன்
|
ஆயில்யம்
|
கேட்டை
|
ரேவதி
|
17
|
இதன்படி,ஒருவர் பிறப்பு சாதகத்தில், சந்திரன்
எந்த விண்மீனின் இருப்புக் காலத்தில் இருக்கிறதோ, அந்த விண்மீனிற்கு உரிய கோளின் தசையே
தொடக்க தசையாக இருக்கும். சாதகக் கணக்கின்படி, சந்திரன் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தினை
எவ்வளவு தூரம் அல்லது கால அளவில் கடந்துள்ளாரோ அவற்றைக் கழித்து விட்டு, மீதம் உள்ளதை
இருப்பு தசை எனக் கணக்கிடுகின்றனர். அதற்குரிய கணிதங்கள் இங்கு தேவையில்லை என்பதால்
அதனைத் தவிர்த்து விடுகிறேன்.
பின்னர் அவரது ஆயுள் காலம் முழுமைக்கும், மேல்
குறிப்பிட்ட வரிசைப்படி, தசாக் காலமானது கணக்கிடப்படுகிறது.
இந்த விம்சோத்திரி தசையில், இன்னும் விரிவாக,
ஒவ்வொரு தசாக் காலத்தினையும், பகுத்து தரப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட கோளின்
தசையானது, பிறக்கோள்களோடும் தொடர்பில் இருக்கிறது.
இதன்படி, எந்த ஒரு தசைக் காலமும் அக்குறிப்பிட்ட
கோளின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட கோளின்
தசையில் மற்ற கோள்களுக்கும் பங்கு உண்டு என்பதாகும். பங்கு உண்டு என்பதைக் காட்டிலும்,
சாதகத்தில் அக் கோள்களின் வலிமையைப் பொருத்து, தசா நாதன் எனப்படும் குறிப்பிட்ட கோளின்
வலிமையை விட அதிக வலிமையை பிற கோள்கள் எடுத்துக் கொள்ளும் என்பதே. அதாவது ஒன்றுடன்
ஒன்று சார்ந்து இருத்தல் என்பதாகும். ஏறக் குறைய, நமது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு
ஒப்பானதாக தசாக் கால கோள்களின் பங்களிப்பு இருக்கிறது. குடியரசுத் தலைவர் – பாராளுமன்றம்
– சட்ட மன்றம் – நீதி மன்றம் – மற்ற அரசியல் சட்ட அமைப்புகள் என்பனவற்றில் யாருக்கு
அதிகாரம் என்பது சூழ் நிலையைப் பொருத்து தீர்மானிக்கப்படுதல் போல, இங்கு தசாக் காலம்
என்பது தீர்மானிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், ஒரு கோளின் தசை என்பது,
பிறக் கோள்களின் புத்தியைச் சார்ந்தும், ஒரு கோளின் புத்தி என்பது பிறக் கோள்களின்
அந்தரத்தைச் சார்ந்தும், ஒரு கோளின் அந்தரம் என்பது பிறக் கோள்களின் சூட்சமத்தைச் சார்ந்தும்
இருக்கிறது.
அதாவது, தசாக் காலம் என்பது, மேலும் நுணுக்கமாக, தசா – புத்தி
– அந்தரம் – சூட்சமம் என அமைக்கப்பட்டுள்ளது.
புத்தி.. அந்தரம்... சூட்சமம்....
No comments:
Post a Comment