வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - இரண்டு (தொடர்ச்சி)
வரையறையும் அடிப்படைக்
கொள்கைகளும்
[கோள்கள்]
12. சூரியன் வணங்கும் இடங்களில் அதிகாரமிக்கவர்;
சந்திரன் கிணறுகளிலும்; செவ்வாய் நெருப்புள்ள இடங்களிலும்: புதன் விளையாட்டுத் திடல்களிலும்;
வியாழன் பண்டக அறைகளிலும்; சுக்கிரன் படுக்கை அறைகளிலும்; சனி குப்பைக்கூளங்கள் குவிந்த
இடங்களிலும் அதிகாரமிக்கவர்கள்.
சூரியனின்
அணிகலன் வலிமையான நூல்; சந்திரன் அதன் புதியபகுதி; செவ்வாய் கொஞ்சம் எரிந்த பகுதி;
புதன் அதன் ஈரமான பகுதி; வியாழன் அதன் பயன்படுத்திய பகுதி; சுக்கிரன் அதன் வலிமையான
பகுதி; சனி அதன் நைந்த பகுதி ஆகும்.
சூரியன்
செம்புவின் மீது அதிகாரம் மிக்கவர்; சந்திரன் இரத்தினங்கள் மீதும்; செவ்வாய் தங்கத்தின்
மீதும்; புதன் பித்தளையின் மீதும்; வியாழன் வெள்ளியின் மீதும்(1); சுக்கிரன்
முத்துக்கள் மீதும்; சனி இரும்பின் மீதும் அதிகாரம் செலுத்துபவர்கள்.
சனி இலக்கனத்தில்
இருக்கும்போதோ அல்லது திரேக்காணத்தில் உதயமாக இருக்கும்போதோ, உள்ள பருவக்காலம் சிசிரா
எனப்படும் – சனவரி மற்றும் பிப்ரவரி.
சுக்கிரன்
இலக்கனத்தில் இருக்கும்போதோ அல்லது திரேக்காணத்தில் உதயமாக இருக்கும்போதோ, உள்ள பருவக்காலம்
வசந்தம் எனப்படும் – மார்ச் மற்றும் ஏப்பிரல்.
அதுபோலவே,
சூரியன் அல்லது செவ்வாய் இருந்தால், அந்த பருவம் கிரீஷ்மா (கோடை) – மே மற்றும் ஜூன்.
சந்திரனக்கு, பருவக்காலம் வர்ஷா – ஜுலை மற்றும் ஆகஸ்ட். புதனுக்கு பருவக்காலம் சாரட்
(இலையுதிர்) – செப்டம்பர் மற்றும் அக்டோபர். வியாழனுக்கு உரிய பருவக்காலம் ஹேமந்தா
(குளிர்காலம்) – நவம்பர் மற்றும் டிசம்பர்.
குறிப்புகள்
(திரு சிதம்பரம்)
(1) வியாழன்
தனது சொந்த வீட்டில் இருந்தால், தங்கத்தின் மீது அதிகாரம் செலுத்துவார்,
குறிப்புகள்:
(நிமித்திகன்)
மூல நூல் ஆசிரியர், கோள்கள் ஆதிக்கம் செலுத்தும் பருவங்களை வரிசைப்படுத்துகிறார்.
சிசிரா, வசந்தம், கோடை, மழை, இலையுதிர், குளிர் என ஆறுவகைக் காலங்களைக் கோள்களுடன் தொடர்பு
படுத்துகிறார். இதில் ஆங்கில மாதங்களை அவர் குறிப்பிடுவது என்பது பொருந்தவில்லை. ஏனெனில்
வராகமிகிரர் வாழ்ந்த காலத்தில் ஆங்கில மாத முறைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்
உரை ஆசிரியர் (திரு சிதம்பரம்) அவரது காலத்தில் நடைமுறையில் இருந்த ஆங்கில மாதங்களை
மூல நூலின் செய்யுளில் இணைத்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. எனது பணி ஆங்கில நூலின் வாக்கியங்களை
அப்படியே மொழிபெயர்ப்பது என்பது மட்டுமே.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
- 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment