சென்ற பதிவில், ஒரு இராசி சக்கரம் போல் இன்னொன்று இருக்க வாய்ப்பானது சுமார் 54 கோடியில் ஒன்று என இருக்கும் என்று, திரு சிதம்பரம் அய்யர் அவர்களை மேற்கோள்காட்டி எழுதியிருந்தேன். அது குறித்து, முகம் தெரியாத நண்பர் ஒருவர் முக நூல் வழியாக அதை மறுக்கும் விதத்தில் குறிப்பு எழுதியிருந்தார்.
“Are you certain that the planets and lagnam in
12 rasis can result in 54 crore combinations?
For example, 2 planets in 12 rasis can have a maximum of 66 combinations (12c2). So 9 planets in 12 rasis can result only in 220 combinations of the rasi chart.”
For example, 2 planets in 12 rasis can have a maximum of 66 combinations (12c2). So 9 planets in 12 rasis can result only in 220 combinations of the rasi chart.”
அதற்கு எனது மறு மொழியாக பதிலுரைத்தேன் –
Yes. Definitely. Please
go through the detailed explanation given by Thiru Chidambaram Iyyer. Further
explanation will be given in the subsequent articles in my Nimiththigan. Thanks
for comment.
ஒன்று நான் எழுதியதை நண்பர் சரியாக புரிந்து கொண்டிருக்க மாட்டார். அல்லது நான் புரியும் விதத்தில் தெளிவாக எழுதத் தவறியிருப்பேன் என நினைக்கிறேன். அவர் permutation and
combination theory-யை தவறாக பயன்படுத்தி இக்கேள்வியை எழுப்பியிருக்கிறார். permutation and
combination theory-யை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக கீழ்வரும் அட்டவனையில் தெளிவு படுத்தியிருக்கிறேன். [a, b என்பதை ab, ba, என இரு உறுப்புகளாக அடுக்குவது permutation, அதே நேரத்தில் ab என ஒரே ஒரு உறுப்பாக அடுக்குவது combination; சோதிடத்தில் permutation and
combination என இரண்டின் பயன்பாடு இருந்தாலும், இங்கு combination மட்டும் பார்ப்போம்.]
a மற்றும் b என இருகோள்கள் மட்டும் இருந்தால், 12 கட்டங்களில் எவ்வாறு அடுக்கலாம் என்பதைப் பாருங்கள்
ஆக, 12 கட்டங்களில் a மற்றும் b என இருகோள்களை, 144 வாய்ப்புகளில் அடுக்கலாம். நண்பர் சொல்வதுபோல் 66 வாய்ப்புகளில் அல்ல. அதுவே a, b, c என மூன்று கோள்களாக இருந்தால் 12 x 12 x 12 என வகைப்படுத்தும்போது, 1728 வாய்ப்புகளில் அடுக்கலாம். அதுபோலவே, மொத்தம் உள்ள 9 கோள்களுக்கும், ஒரு இலக்கினத்தையும் கணக்கிடுங்கள். அதில் புதன், வெள்ளி, இராகு(கேது) இவற்றின் நிலைகளைக் கணக்கில் கொண்டு கணக்கிட்டால், ஏறக்குறைய 54 கோடி வகைகளில் இராசி சக்கரத்தினை வகைப்படுத்தலாம். இது இராசி சக்கரத்திற்கு மட்டுமே. நவாம்சம், திரேக்கானம், தசாம்சம் என இருபது வகைகளில் வகைப்படுத்தினால் என்ன வரும் என்று கணக்கிட்டு எழுதுங்கள். குறிப்புரை
எழுதிய முகம் தெரியாத நண்பருக்கு நன்றி.
அடுத்த பதிவில், ஒரே நேரத்தில் பிறக்கும் இரு குழந்தைகளின் இராசி சக்கரம் ஒன்றாக இருக்குமா என்பதை ஆராய்வோம்.
2 comments:
Thanks for providing a detailed and clear explanation with charts to explain the 54crore possible combinations of a rasi chart.
Now I can see my improper understanding and thanks for the clarification.
Thanks.
Post a Comment