வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஏழு
திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி
[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது
போல்
இங்கு திரேக்காண வடிவங்கள்
விளக்கப்பட்டுள்ளன]
28. மகரத்தின் முதல் திரேக்காணமானது, உடல் முழுதும்
முடியால் மூடிய மனிதனாகவும், கடல் அரக்கன் போல வலிமையாகவும், காட்டுப்பன்றி போன்ற உடலும்,
மூக்கில் வலையம் அணிந்தும் ஒழுங்கற்ற முகமும் கொண்டிருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது வலையங்களைச் சுமந்த மனிதனாக இருக்கும். இதன் அதிபதி சனி.
29. மகரத்தின்
இரண்டாவது திரேக்காணமானது, கலைகளில் திறமை மிக்க பெண்ணாகவும், தாமரை இதழ்களைப் போன்ற
விழிகளும், கருப்பாகவும், பல்வேறு பொருட்களின் மீது ஆசை கொண்டவராகவும் இரும்பினால்
ஆன காதணிகளை அணிந்தவராகவும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது பெண்ணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சுக்கிரன்.
30. மகரத்தின்
மூன்றாவது திரேக்காணமானது சணல் போன்ற ஆடையைப் போர்த்திய கின்னரர்களின் வடிவிலும், அம்பாராத்துணி,
அம்பு, பாதுகாப்பு ஆடை அணிந்தும், தோளில் விலைமதிப்புமிக்க கற்களைப்பதித்த பானையைச்
சுமந்தும் காணப்படும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஆயுதம் ஏந்தி இருக்கும். இதன் அதிபதி புதன்.
திரேக்காணத்தின்
பலன்கள்.தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment