வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஏழு
திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி
[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது
போல்
இங்கு திரேக்காண வடிவங்கள்
விளக்கப்பட்டுள்ளன]
31. கும்பத்தின்
முதல் திரேக்காணமானது கழுகின் முகம் கொண்ட மனிதனாகவும், அதன் எண்ணங்கள் முழுதும் எண்ணெய்,
மது, தண்ணீர், உணவு ஆகியவற்றை அடைவது குறித்தும், சணல் போன்ற ஆடை, பட்டு, மான்தோல்
போர்த்தியபடியும் காணப்படும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஆணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சனி.
32. கும்பத்தின்
இரண்டாவது திரேக்காணமானது இலவ மரத்தினால் ஆன எரிந்த தேரில் இருக்கும் பெண்ணாகவும்,
இரும்பினைச் சேகரிப்பதாகவும், காட்டில் வசிப்பதாகவும் அழுக்காண ஆடை அணிந்தும் காணப்படும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது தீப்பந்தினை ஏந்திய பெண்ணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி புதன்.
33. கும்பத்தின்
மூன்றாவது திரேக்காணமானது கருப்பு நிற மனிதனாகவும், காதுகளில் முடிமுளைத்தும், கிரீடம்
சூடியும், கிளைகள், இலைகள், அழுக்கு எண்ணெய், இரும்பு, பானை ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதாகவும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஆணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சுக்கிரன்.
திரேக்காணத்தின்
பலன்கள்.தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment