வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஏழு
திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி
[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது
போல்
இங்கு திரேக்காண வடிவங்கள்
விளக்கப்பட்டுள்ளன]
22. விருச்சிகத்தின் முதல் திரேக்காணமானது நிர்வாண
நிலையில் அணிகலன்கள் ஏதுமின்றி அழகிய பெண்ணாக, அவருடைய இடத்தினை விட்டு விலகி நீண்ட
கடல் பயணத்திற்கு பின் நிலத்தினை அடைந்து, காலில் பாம்பு சுற்றிய நிலையில் காணப்படும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது பெண்ணும் பாம்புமாக இருக்கும். இதன் அதிபதி செவ்வாய்.
23. விருச்சிகத்தின்
இரண்டாவது திரேக்காணமானது ஆமையின் ஓடு அல்லது பானை போன்ற உடலமைப்பு கொண்ட பெண்ணாகவும்,
அவர் இருக்கும் இடத்தில் தனது கணவருக்காக வசதியினை விரும்புவராகவும், அவருடைய உடலில்
பாம்பு சுற்றிய நிலையிலும் காணப்படும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது பெண்ணும் பாம்புமாக இருக்கும். இதன் அதிபதி வியாழன்.
24. விருச்சிகத்தின்
மூன்றாவது திரேக்காணமானது சிங்கம் போன்றும் அகலமான தட்டையான ஆமை போன்ற முகமும், மரக்கட்டையில்
நாய்கள், மான், நரி மற்றும் காட்டுப்பன்றி ஆகியவற்றினை செதுக்கியதாகவும், சந்தன மரங்கள்
சூழ்ந்த நாட்டில் வசிப்பதாகவும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது நான்குகால் இராசியாக இருக்கும். இதன் அதிபதி சந்திரன்.
திரேக்காணத்தின்
பலன்கள்.தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment