வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஏழு
திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி
[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது
போல்
இங்கு திரேக்காண வடிவங்கள்
விளக்கப்பட்டுள்ளன]
34. மீனத்தின்
முதல் திரேக்காணமானது கமண்டல பாத்திரத்தையும், கம்பம், முத்து, மணிகள், சங்குகள் ஆகியவற்றைக்
கையில் கொண்டும், அணிகலன்களைச் சுமந்தும், தனது மனைவியை அழகுபடுத்துவதற்காக கடலின்
பயணம் செய்வதாக இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஆணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி வியாழன்.
35. மீனத்தின்
இரண்டாவது திரேக்காணமானது கையில் நீண்ட கொடியும் பதாகையைச் சுமந்தும், கடலின் அக்கரையைக்
கடக்க தனது தோழியுடன் படகில் செல்வதாகவும், செண்பகமலர் போன்று மலர்ந்த முகமும் கொண்டிருக்கும்,
குறிப்பு:
இந்த திரேக்காணமானது பெண்ணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சந்திரன்.
36. மீனத்தின்
மூன்றாவது திரேக்காணமானது தன் உடலைப் பாம்பு சுற்றிய மனிதனாகவும், ஆடையற்று காட்டில்
ஒரு பள்ளத்தின் விளிம்பில் நிற்பதாகவும், திருடர்கள், நெருப்பு ஆகியவற்றாலும், பசியாலும்
அழுகையாலும் இருப்பதாகவும் காணப்படும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது பாம்பின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி செவ்வாய்.
குறிப்பு:
ஆசிரியர் திரேக்காணத்தின் இத்தகைய விளக்கங்களின் பயன்பாட்டினை தனது யாத்திரை எனும்
நூலில் கூறியுள்ளார். திரேக்காணமானது ஏற்கக் கூடிய வடிவில் இருந்தால், அதாவது பழங்கள்,
பூக்கள், இரத்தினங்கள், பானைகள் ஆகியவற்றைச் சுமந்திருப்பதுடன், சுபக் கோள்களின் பார்வையில்
இருந்தால், அது வெற்றியாக முடியும், அவை அருவருப்பான தோற்றத்தில் இருந்தால், ஆயுதம்
ஏந்தி இருத்தல் மற்றும் அசுபக்கோள்களின் பார்வைப் பெற்றிருந்தால், அது வருத்தத்துடனும்
தோல்வியுலும் முடியும். அவை பாம்புகள் அல்லது சங்கிலிகள் ஆகியவற்றைச் சுமந்திருந்தால்
மனக்குழப்பமும், சிறைத்தண்டனையும் பெறுவதாக இருக்கும். வராகமிகிரரின் மகனான பிரிதுயாசர்
தனது ஷட்பஞ்சசிகம் எனும் ஓரை சோதிட நூலில்
இந்த திரேக்காண விளக்கங்கள் திருடர்களைக் கண்டுபிடிக்கப் பயன்படும் என்கிறார்.
திரேக்காணத்தின்
பலன்கள் முற்றும்
அடுத்து
.. முடிவுரை
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment