Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, November 27, 2017

கடகத்தின் திரேக்காண பலன்கள் -பிருகத் ஜாதகா – 209



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]



10. கடகத்தின் முதல் திரேக்காணமானது இலைகள், கிழங்குகள், பழங்களைச் சுமந்த மனிதனாகவும், யானையைப் போன்ற உருவ அமைப்பும் கொண்டிருக்கும்; காட்டில் சந்தன மரத்தடியில் வசிப்பதாகவும், ஒட்டகத்தினைப்போல் நீண்ட பாதமும், காட்டுப்பன்றியைப் போன்ற முகமும் குதிரையின் கழுத்தும் கொண்டிருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது நான்கு கால் மிருகத்தின் வடிவம் கொண்டிருக்கும். இதன் அதிபதி சந்திரன்.



11. கடகத்தின் இரண்டாவது திரேக்காணமானது தாமரை மலர்களைச் சூடிய மங்கைபோன்றும், பாம்பினைக் கையில் கொண்டும், கடினமனம் கொண்டதாகவும், இளமையானதாகவும், காட்டில் அழுதுகொண்டும், பலாபோன்ற மரத்தின் கிளையைக் கையில் பிடித்தவாறும் காணப்படும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஒரு பெண்ணின் வடிவம் கொண்டிருக்கும். இதன் அதிபதி செவ்வாய்.



12. கடகத்தின் மூன்றாவது திரேக்காணமானது, பாம்புகள் சூழ உள்ள மனிதனாகவும், தனது மனைவிக்காக அணிகலன்கள் வாங்குவதற்காக கடலில் படகில் செல்பவராகவும், அணிகலன்கள் அனிந்தவராகவும், தட்டையான முக அமைப்பு கொண்டதாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஒரு ஆணின் வடிவமும் பாம்பின் வடிவமும் கொண்டிருக்கும். இதன் அதிபதி வியாழன்.



திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: