வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஏழு
திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி
[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது
போல்
இங்கு திரேக்காண வடிவங்கள்
விளக்கப்பட்டுள்ளன]
13. சிம்மத்தின்
முதல் திரேக்காணமானது கழுகு மற்றும் குள்ள நரியின் உருவம் கொண்ட மனிதனாகவும், இலவம்பஞ்சு
மரத்தின் மீது அமர்ந்தும், நாயைப் போன்ற உருவமும், அழுக்கான ஆடைகளை அணிந்த மனிதனாகவும்,
தாய்தந்தையரைப் பிரிந்தவராகவும், ஓசையுடன் அழுபவராகவும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஒரு மனிதனின், நாற்கால் உயிரினம், பறவை ஆகியவற்றின் வடிவில் இருக்கும்.
இதன் அதிபதி சூரியன்.
14. சிம்மத்தின்
இரண்டாவது திரேக்காணமானது குதிரைபோன்ற வடிவம் உடைய மனிதனாகவும், தலையில் சற்றே வெண்மை
கலந்த பூக்களால் ஆன மாலையினைச் சூடியதாகவும், மான் தோல் போர்த்தியதாகவும், சிங்கம்போல்
கொடூரமான, நெருங்கமுடியாததாகவும், கையில் அம்பும், வளைந்த மூக்கும் கொண்டிருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஆயுதம் பூண்ட மனித வடிவில் இருக்கும். இதன் அதிபதி வியாழன்.
15. சிம்மத்தின்
மூன்றாவது திரேக்காணமானது கரடி போன்ற முகம் கொண்டதாகவும், குரங்கின் குறும்புத்தனமும்,
கையில் பழமும் இறைச்சியும், நீண்ட தாடியும் மீசையும், சுருள் முடியும் கொண்டிருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஆணின் வடிவமும் நான்கு கால்களும் கொண்டிருக்கும். இதன் அதிபதி
செவ்வாய்.
திரேக்காணத்தின்
பலன்கள்.தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment