வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஏழு
திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி
[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது
போல்
இங்கு திரேக்காண வடிவங்கள்
விளக்கப்பட்டுள்ளன]
4. ரிசபத்தின்
முதல் திரேக்காணமானது, குட்டையான மற்றும் சுருளான கூந்தலை உடைய பெண்ணாகவும், பானை போன்ற
தொப்பையும், கருகிய ஆடையை அணிந்தவராகவும், தாகமும், உணவிலும் நகைகளில் ஆசையும் கொண்டதாக
இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது பெண்ணின் வடிவமும் நெருப்பினைக் கொண்டதாகவும் இருக்கும். இதன்
அதிபதி சுக்கிரன்.
5. ரிசபத்தின்
இரண்டாவது திரேக்காணமானது, ஆணின் வடிவம் கொண்டதாகவும், வேளாண்மை, தானியங்கள், வீடு,
பசுக்கள், இசை, நாட்டியம், ஓவியம், எழுத்து இது போன்ற வேலைத்திறன் கொண்டதாகவும், ஏர்
உழபவராகவும், பயணத்தோடு தொடர்புடைய தொழிலும், எருதுக்கு இருப்பது போல் வளைந்த கழுத்தும்,
தாகமும், செம்மறியாட்டின் முகம் போன்ற அமைப்பும், அழுக்கான ஆடைகளை அணிந்ததாகவும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஆணின் வடிவமும் நாற்கால் வடிவமும் கொண்டிருக்கும். இதன் அதிபதி புதன்.
6. ரிசபத்தின் மூன்றாவது திரேக்காணமானது, யானையைப்
போல வடிவம் கொண்ட ஆணாகவும், பெரிய பற்களும், ஒட்டகத்தினைப் போன்ற பாதங்களும், பழுப்பு
நிறமும், செம்மறியாடு மற்றும் காட்டின் விலங்குகளை ஒத்தும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஆணின் வடிவமும் நாற்கால் வடிவமும் கொண்டிருக்கும். இதன் அதிபதி சனி.
திரேக்காணத்தின்
பலன்கள்.தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment