வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஏழு
திரேக்காண பலன்கள்
[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது
போல்
இங்கு திரேக்காண வடிவங்கள்
விளக்கப்பட்டுள்ளன]
1. மேசத்தின்
முதல் திரேக்காணமானது வெள்ளை ஆடையை இடுப்பில் அணிந்ததாகவும், கருப்பாகவும், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்டவராகவும்,
பயமற்ற தோற்றமும், சிவந்த கண்களும், கையில் கோடாரியும் கொண்டிருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது மனித வடிவமும் ஆயுதம் பூண்டதாகவும் இருக்கும். இதன் அதிபதி செவ்வாய்.
2. யவணாச்சாரியாரின் கருத்துப்படி, மேசத்தின் இரண்டாவது
திரேக்காணமானது பெண் வடிவம் கொண்டதாகவும், பொன் நகைகளின் மீதும் இனிப்பு பொருட்களின்
மீதும் மிகுந்த ஆசை கொண்டதாகவும், பானை போன்ற தொப்பையினை உடையதாகவும், குதிரையைப் போன்ற
முகமும், தாகம் கொண்டதாகவும், ஒற்றைக் கால் கொண்டதாகவும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது பெண்ணின் வடிவமும், நான்குகால் கொண்டதாகவும், முகமானது பறவையைப்
போன்றும் இருக்கும். இதன் அதிபதி சூரியன் ஆகும்.
3. மேசத்தின் மூன்றாவது திரேக்காணமானது, தீய எண்ணம்
கொண்ட மனிதராகவும், கலைகளைக் கற்றறிந்தவராகவும், பழுப்பு நிறம் கொண்டதாகவும், வேலையில்
ஆர்வம் கொண்டதாகவும், செய்யும் வேலையில் தோல்வி காண்பவராகவும், கையில் தடியுடனும்,
சிவப்பு ஆடை அணிந்ததாகவும், கோபம் கொண்டதாகவும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்கானமானது மனிதனின் வடிவமும் ஆயுதம் பூண்டதாகவும் இருக்கும். இதன் அதிபதி
வியாழன்.
திரேக்காணத்தின்
பலன்கள்...தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment