ஒன்று முதல் 12 வரையிலான வீடுகளின் வரையறை விளக்கத்தில்
எவ்வித கோள்களின் நிலையினையும் நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வீடு உள்ள
இராசி, அந்த வீட்டில் உள்ள கோள்கள், அவற்றின் தன்மைகள் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல்,
வீடுகளின் தனித்துவமான வரையறைகளை மட்டுமே
இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்கிறேன். முதலில் இவற்றின் தனி இயல்புகளை வரையறை செய்துவிட்டு,
பின்னர் அவற்றின் ‘இருப்பு’ நிலையினை ஆராய்வதே முறை என்பதால், 12 வீடுகளின் தனி இயல்புகளை
வரையறை செய்வோம்.
அடுத்து நாம்
இரண்டாம் வீட்டின் வரையறையினைப் பார்ப்போம். முதல் வீடு தனி மனித இயல்புகளை வரையறுப்பதாகக்
கூறினோம். இரண்டாம் வீடு என்பது ஒரு சாதகரின் வாழ்க்கை நிலையினை உரைப்பதாக வரையறுத்துள்ளனர்.
வாழ்க்கை நிலை என்பது – கல்வி, குடும்பம், செல்வம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதால்
அவை தொடர்புடைய செய்திகளைத் தொகுத்து அளித்துள்ளனர். இங்கும், பல்வேறு சோதிட நூல்கள்
பல்வேறு இயல்புகளைத் தெரிவித்தாலும், சில இயல்புகளில் ஒன்றுபட்டும், சில இயல்புகளில்
மாறுபட்டும் இருக்கின்றன. பொதுவில் ஒன்றுபட்டு இருப்பவை – கல்வி, குடும்பம், செல்வம்
ஆகிய மூன்றில் மட்டுமே. எனவே இவற்றின் விரிவுகளையே நாம் இரண்டாம் வீட்டின் இயல்புகளாகக்
கொள்ள வேண்டும்.
கல்வி எனும் நிலையில் – மொழி, பேச்சு, வாக்கு, கல்வி
நிலை
குடும்பம் எனும் நிலையில் – வாழ்க்கை நிலை, இன்ப
துன்பங்கள், மன நிலை
செல்வம் எனும் நிலையில் – பொன், பொருள், வாழ்விற்கான
செல்வ நிலை
ஆக, இவை தொடர்பான
நிலைகளையும், இவற்றின் நீட்சியையும் உள்ளக்கியதே இரண்டாம் வீட்டின் இயல்புகள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
நீட்சி எனும்போது – எடுத்துக்காட்டாக – எழுத்து, அறிவு, கணிதம், பேச்சுத் திறன் போன்றவற்றை
கல்வியோடு தொடர்பு படுத்திக் கூறுவதாகும். கல்வி என்பது படிப்பறிவும் பட்டறிவும் இணைந்ததே.
இந்த இரண்டாம் வீட்டின் இயல்புகளை எவ்வாறு வரையறுத்துள்ளனர்
என்பதை, இலக்கின வரையறையில் கூறியதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். அதுதான் நிகழ்தகவு
எனும் கணிதம்.
…. அடுத்து மூன்றாம் வீடு
No comments:
Post a Comment