Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, January 14, 2018

சோதிடத்தின் நம்பகத்தன்மை.. தொடர்ச்சி (2)



சோதிடத்தின் நம்பகத்தன்மை என்பது அதன் கணிப்பு எந்த அளவு மெய்ப்பிக்கப்படுகிறது எனும் நிலையினைப் பொருத்து உள்ளது. நம்பகத்தன்மை குறையும்போது அது அறிவியல் கணிதம் இல்லை எனும் கற்பிதம் தோன்றிவிடுகிறது.


ஆனால் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், கணிதம் எப்போதும் பொய்யாவதில்லை. கணித முறைகளிலும் அதைக் கையாள்வதிலும் பிழை நேரிடும்போது கணித விடைகள் தவறாகிப் போகின்றன. கணித விடைகள் தவறாகிப் போவதால், கணிப்புகளும் தவறாகிப் போகிறது. கணிப்புகள் தவறாகிப் போவதால், சோதிடம் அதன் நம்பகத் தன்மையினை இழந்து விடுகிறது. நம்பகத் தன்மை இழந்து விடுவதால் சோதிடம் பொய் எனும் கற்பிதம் உருவாகிறது.


      இவ்வாறான பிழைகள் நேரிட யார் காரணம் அல்லது எது காரணம் என ஆராயத் தொடங்கும்போது விருப்பு வெறுப்பு இன்றி ஆராய வேண்டும். அது சில சமயம் சோதிடக் கொள்கையின் அடிப்படையினைக்கூட ஆட்டிப் பார்க்கும்.


நான், நிமித்திகன் பதிவிடத் தொடங்கியபோது விருப்பு வெறுப்பு இன்றி ஆராய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இன்னமும் இருக்கிறேன். எனவே சோதிடம் அறிவியல் கணிதம் என்பதனை மெய்ப்பிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளுடனேயே ஆராய வேண்டும். அவ்வாறு மெய்ப்பிக்க முற்படும்போது சில நம்பிக்கைகளை நாம் புறந்தள்ள வேண்டும். தாலமியின் கொள்கை புறந்தள்ளப்பட்டுதான் கலீலியோவின் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.


இந்தியாவின் நூறாவது செயற்கைக் கோள் 12.01.2018 அன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. அதனைச் செலுத்துவதற்கு முன்பு, இஸ்ரோவின் தலைவராக நாளை (15.01.2018) பொறுப்பேற்க உள்ளவரும் தமிழருமான திரு.சிவம் அவர்கள், தமது ஊரில் உள்ள குலதெய்வ காளிக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வந்துள்ளார். இதற்கு முன்னர் இருந்த திரு.இராதகிருஷ்ணன் அவர்களும் ஒவ்வொருமுறை செயற்கைக் கோள்கள் செலுத்தும்போதும் திருப்பதி ஏழுமலையானை வணங்கிட்டு வருவார். அவர்களுக்குத் தெரியும் கடவுள் நம்பிக்கை என்பது வேறு வான்அறிவியல் என்பது வேறு என்று. அவர்கள் கடவுளையும் வானியலையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளவில்லை. கடவுள் நம்பிக்கையும் அறிவியலும் என்பது வேறு வேறு என்பதில் தெளிவாக உள்ளனர். இது சோதிட அறிவியலுக்கும் பொருந்தும் அல்லது பொருந்த வேண்டும் அல்லவா? என்ன அடிப்படை கொஞ்சம் ஆட்டம் காண்பதுபோல் இருக்கிறதல்லவா? அது என் பிழையில்லை.


உங்கள் நம்பிக்கைகளை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் சோதிடத்தினைப் பொருத்தவரையில் கோள்களைக் கோள்களாக மட்டுமே பாருங்கள். ஏனெனில் சோதிடம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பொதுவானதாக இருந்தால் மட்டுமே அதனைப் பொதுவில் வைக்க முடியும். பொதுவில் வைக்கும்போது மட்டுமே அதனை எவ்வித கணித ஆய்விற்கும் உட்படுத்த முடியும். கணித ஆய்வுகள் மெய்ப்பிக்கப்படும்போது அதற்கான வரையறைகள் வகுக்கப்பட முடியும். அவ்வாறான வரையறைகளே அதனை அறிவியல் நிலைக்கு கொண்டு செல்லும். அப்போதுதான் நமது பண்டைய கணித அறிவியலான சோதிடம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை வரும்.


அறிவியல் இன்றி அனுமானம் இல்லை. அனுமானம் மட்டுமே அறிவியல் ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


இனி சோதிடப் பலன் உரைத்தலில் அறிவியற்கணிதமான சோதிடம் எவ்வாறெல்லாம் இடர்பாடுகளைச் சந்திக்கிறது என்பதை சற்று கவனமாகவே விருப்பு வெறுப்பின்றி ஆராய்வோம்.

இன்னும் தொடர்வோம்




7 comments:

Unknown said...

Can you relate the effect of astrology on marriages within blood relations only destroys the family either by giving disabled children or simply causing death of children or parent so early ,why is it so? N i have seen many no of death in family those who had blood relation marriage,n more specifically on the year when their kids studying in 10th std,that's either father or mother or brother or themselves and their horoscope to the max has rahu or ketu in fourth house why is that so?????i mean horoscope of living individual

nimiththigan said...

I do not think so. The occurrence you have mentioned here may be co-incidents with correlation. There is no concrete evidence to prove your citation. But the rate of probability for suffering such illness is found higher in respect of the children of blood relative’s than the children of non-blood couple, as per the medical evident. However, in my astrological research, i found in the horoscopes that some genetic charecters are being carried forward from the parants to their children. Research are going on.

Unknown said...

What is your opinion about pitru dish most often they say you have pitru dosh n specifically your ancestors have done wrong deeds to woman n so you are suffering because of this. If a person has commited sin means he alone should suffer n why his sins are carried to his generations and his lineage should suffer???

Unknown said...

Concrete evidences are there . studied in net that one civilization completely gets destroyed as they married within themselves and another civilization from Africa i think so has flourished well as they had marriage outside theirs and it spread throughout the world ,sorry can't remember full details but it's about DNA fossil study in Africa and Russia i think

nimiththigan said...

தமிழில் தொடரவும்.

Unknown said...

பித்ரு தோஷம் பற்றி தாங்கள் கருத்து கூற முடியுமா?? முன்னோர்கள் சிலர் செய்த தவறுகளுக்கு அச்சந்ததி ஏன் வேதனை அனுபவிக்க வேண்டும்,எந்த தவறு செய்யாமல் கிடைத்த வாழ்க்கை போதும் என்று நிரைவாக வாழும் போதே,அவர்களுக்கு மிகுந்த வேதனைகளை மட்டும் பரிசாக இறைவன் கொடுப்பதும் ஏன்??

nimiththigan said...

நம்பிக்கை சார்ந்த தகவல்கள் சோதிடத்தில் விரவிக் கிடக்கின்றன. மெய்ப்பிக்க முடியாத தகவல்களும் அவற்றுள் அடக்கம். உங்கள் கேள்விக்கான பதிலும் இதில் அடக்கம். விரிவான செய்திகள் பதிவில் தொடரும்.