Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, January 16, 2015

இராசிகளில் கோள்களின் நகர்வு - சூரியன்



            சோதிடத்தில் வான் மண்டலமானது பன்னிரெண்டு இராசிகளாகப் பகுக்கப் பட்டுள்ளது எனப் பார்த்தோம்பன்னிரெண்டு இராசிகளிலும் கோள்களின் பகிர்வையும் பார்த்தோம். கோள்கள் வான் மண்டலத்தைச் சுற்றி வருவதற்கும், இராசி மண்டலத்தைச் சுற்றி வருவதற்கும் ஒரே கால அளவைக் கொண்டிருக்கின்றனவா ? ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். பின் எப்படி கணிதம் சரியாக வரும் ?.

ஒவ்வொரு கோளாகப் பார்க்கலாம்.


1.       சூரியன்

            சூரியன் எனும் தலைவர், தன்னுடைய குடும்பக் கோள்களுடன் இந்த பிரபஞ்சத்தைச் சுற்றி வருவது நமக்குத் தெரியும்பூமியானது தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவர 365.26 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. மற்றொரு விதியின்படி, அதாவது காட்சிப்பிழை அல்லது பூமி மையக் கொள்கையின் படி சூரியன் பூமியைச் சுற்றிவர 365.26 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இந்த 365.26 நாட்கள் என்பது வான் மண்டலத்திற்கும், இராசி மண்டலத்திற்கும் பொதுவானதே.



            எனவே, 360 பாகைகள் கொண்ட இராசி மண்டலத்தை, 365.26 நாட்களில் சூரியன் கடக்க வேண்டுமெனில், சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு இராசியில் 01 பாகை நகர வேண்டும். மிகத் துள்ளியக் கணக்கீட்டில், (00’)கலை, (00”)விகலையில்  சிறு மாற்றம் இருக்கும். சூரியன் ஒரு இராசியில் ஒரு மாதம் இருக்கும். மேசத்தில் ஆரம்பத்தில் இருக்கும் சூரியன் ஒரு சுற்று முடித்து மீண்டும் மேசத்திற்கு வருவதற்கு ஓர் ஆண்டுக் காலம் ஆகிறது. திருக்கணிதம் மற்றும் வாக்கியம் மற்றும் எபிமெரிஸ் எனும் மேல்நாட்டு முறைப் பஞ்சாங்கங்களிலும், சூரியனின் நகர்வு சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு பாகை எனும் அளவிலேயே இருக்கிறது. வானியல் மற்றும் சோதிடம் இரண்டிலும் சூரியனின் நகர்வு சராசரியில் சரியாகவே இருக்கிறது.

                                                                                                                                  அடுத்து சந்திரன்....

No comments: