வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஒன்று (தொடர்ச்சி)
வரையறையும் அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]
4. இராசி சக்கரத்தின் (பன்னிரெண்டு) வீடுகளானது, மேசத்தின் முதற்புள்ளியிலும், அசுவனியிலும்(விண்மீன்) தொடங்கி, ஒவ்வொன்றும் ஒன்பது நட்சத்திர கால்பாகங்கள் எனும் வகையில், ஒரு முழு வட்டத்தில், காலபுருசனின் தலை, முகம், நெஞ்சு, இதயம், வயிறு, தொப்பூழ், அடிவயிறு, பிறப்புறுப்புகள், இரண்டு தொடைகள், இரண்டு முழங்கால்கள், இரண்டு கணுக்கால்கள், இரண்டு பாதங்கள் எனக் கொண்டுள்ளது. இராசி, ஷேத்திரம், கிரகா, ரிக்ஷ, பாவம், பாவனா (எனும் பதங்கள்) அனைத்தும் ஒரே பொருளைத் தருகின்றன.
குறிப்புகள்
(சிதம்பரம் அய்யர்)
கீழே வரும் அட்டவணை உடனடி பார்வைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இராசி
|
குறியீடு
|
உடல் உறுப்பு
|
மேசம்
|
ஆடு
|
தலை
|
ரிசபம்
|
எருது
|
முகம்
|
மிதுனம்
|
இருவர்
|
நெஞ்சு
|
கடகம்
|
நண்டு
|
இதயம்
|
சிம்மம்
|
சிங்கம்
|
வயிறு
|
கன்னி
|
படகுப்பெண்
|
தொப்பூழ்
|
துலாம்
|
தராசு
|
அடிவயிறு
|
விருச்சிகம்
|
தேள்
|
பிறப்புறுப்புகள்
|
தனுசு
|
குதிரை- மனிதன்
|
இரண்டு தொடைகள்
|
மகரம்
|
முதலை-மான்
|
இரண்டு முழங்கால்கள்
|
கும்பம்
|
குடம்
|
இரண்டு கணுக்கால்கள்
|
மீனம்
|
மீன்கள்
|
இரண்டு பாதங்கள்
|
இருபத்தேழு விண்மீன்கள் முறையே:-
அசுவனி
|
Arietis
|
சுவாதி
|
Bootis, Arturus
|
|
பரணி
|
Arities and Muscat
|
விசாகம்
|
Librae
|
|
கார்த்திகை
|
Tauri, Alcyone
|
அனுசம்
|
Scorpionis
|
|
ரோகிணி
|
Tauri, Aldebaran
|
கேட்டை
|
Scorpionis, Aritares
|
|
மிருகசீரிசம்
|
Orionis
|
மூலம்
|
Scorpionis
|
|
திருவாதிரை
|
Orionis
|
பூராடம்
|
Sagittarii
|
|
புனர்பூசம்
|
Gemini Pollux
|
உத்திராடம்
|
Sagittarri
|
|
பூசம்
|
Cancri
|
திருவோணம்
|
Aquilae, Altair
|
|
ஆயில்யம்
|
Hydrae
|
அவிட்டம்
|
Delphini
|
|
மகம்
|
Leonis, Regulas
|
சதயம்
|
Aquarii
|
|
பூரம்
|
Leonis
|
பூரட்டாதி
|
Pegasi
|
|
உத்திரம்
|
Leonis
|
உத்திரட்டாதி
|
Pegasi & Andremedae
|
|
அஸ்த்தம்
|
Corvi
|
ரேவதி
|
Piscium
|
|
சித்திரை
|
Virginis Spica
|
இந்த விண்மீன்கள்
அல்லது சந்திர வீடுகள் என்பன ஒவ்வொன்றும் நான்கு சமமான பாகங்களாகப் பிரிக்கப்பட்டு
அவை நட்சத்திர பாதங்கள் என அழைக்கப்படுகின்றன. எனவே அவை, 108 பகுதிகளாக வான்சுற்றில்
இருப்பதுடன், ஒவ்வொரு வீடும் ஒன்பது பாதங்கள் அல்லது 2¼ விண்மீன்களைக் கொண்டுள்ளன.
முதல் விண்மீனான அசுவனியின் அதாவது மேசத்தின் முதற்புள்ளியில், அதாவது ரேவதியின்
200, வான் அயனத்திற்கு கிழக்கே
(முன்னுரையில் குறித்தபடி) தொடங்குகிறது, அதன்படி, கிருத்திகையின் இரண்டாவது பாதம்,
ரிசபத்தின் முதற்புள்ளியில் தொடங்குகிறது. மிருகசீரிசத்தின் மூன்றாவது பாதம், மிதுனத்தின்
முதற்புள்ளியில் தொடங்குகிறது, புனர்பூசத்தின் நான்காவது பாதம், கடகத்தின் முதற்புள்ளியில்
தொடங்குகிறது, அது போலவே மற்றவையும் தொடர்கிறது.
இராசி, ஷேத்திரம்,
கிரகா முதலிய பதங்கள் அனைத்தும் இராசிமண்டலத்தின் வீடுகள் என்பதுடன், அம்மண்டலத்தின்
பன்னிரெண்டு பகுதிகள் அல்லது நீள்வட்ட சுற்றுப்பாதையின் 300 பாகைகள் கொண்ட
பகுதிகள்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment