Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, January 8, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-20


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

அறிமுகம்(தொடர்ச்சி)


            நாடிகிரந்தத்தின் ஆசிரியர் ஒரு அம்சத்தையும் அதன் புள்ளிகளின் நிலைகளையும் அல்லது அவர்களின் இராசி மண்டல பிரிவின்படி கோள்களின் நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, சிறிது மாற்றங்கள் அல்லது இணைப்புகளுடன், மேற்சொன்ன வரைபடத்தை உருவாக்கி, அம்சத்தின் அடிப்படையாக மனித வாழ்வின் கணக்கினை முடிவு செய்கிறார். ஒருவரின் வாழ்வின் 30 அல்லது 40  முக்கிய நிகழ்வுகளை மட்டுமே தாம் பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறார். இத்தகைய ஒரு கணக்கின் கீழ் சில பல மனிதர்கள் வரும் நிலையில், மிக நுணுக்கமாக ஏற்படும் வித்தியாசத்தினை நாடிகிரந்தம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. எனவே நாடிகிரந்தம் மனிதவாழ்வின் மிகச் சுருக்கமான வரைபடத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. ஒரு சிறந்த சோதிடரால், ஒரு மனிதனின் வாழ்வின் 10 அல்லது 20 கால நிகழ்வினை நாடிகிரந்தத்தில் எழுத முடியும்.

            நாடிகிரந்தம் பார்ப்பவர்களின் பொதுவான புகார் பற்றி குறிப்பிடுவதற்கு இது சரியான இடம் என நினைக்கிறேன், அதாவது இந்த புத்தகம் ஒரு மனிதனின் பழைய நிகழ்வுகளை சரியாக சொல்ல முடிகிறபோது, எதிர்கால நிகழ்வுகளைத் தவறாகவே சொல்கிறது என்பதேஇந்தத் தவறு கிரந்தத்தின் தவறு அல்லஒருவரின் எந்தக் காலக் கட்டத்தின் ஆலோசனைக்கு புத்தகத்தினை நாடுவார்கள் என்பதுடன்  அந்தக் காலக்கட்டத்தின் சரியானக் கணக்கினையும் நிச்சயம் ஆசிரியரால் அனுமானிக்க முடிவதில்லை, அதன் விளைவாக  (அத்தகைய சிறந்த சோதிடர்) தெரிந்தே தவறு செய்கிறார். இந்த உண்மையானது, முதலில் விவரித்தவாறு, சாதகத்தில் உள்ள கோள்களின் நிலையானது, நாடிகிரந்தத்தில் கூறப்படும் கோள்களுடன் ஒத்துவருவதில்லைநாடிகிரந்தம் வைத்திருப்பவர் தம்மிடம் வருபவர் கொடுக்கும் சாதகத்துடன், தாம் வைத்துள்ள சாதகங்களுடன் கோள்களின் நிலை ஏறக்குறைய ஒத்துவரக்கூடியதை ஆராய்கிறார். அவ்வாறு ஒத்து வரக்கூடிய சாதகத்தினை அந்த சோதிடர் எடுத்துக் கொண்டு, எத்தகையக் கருத்துக்கள் அந்த சாதகரின் வாழ்வோடு பெரும்பாலும் ஒத்துவருகின்றனவோ அதைக் கூறுவதால் அது சரியானதாக கருதப்படுகிறது. இப்போது, அந்த சோதிடர் தம்மிடம் ஆலோசனைக்கு வரும் நபருக்குஅவரிடம் உள்ள புத்தகத்தில் உள்ள வாக்கியங்களைப் படித்துக் காட்டினால், அந்தப் பக்கங்கள் பொருந்தாமல் போவதுடன், மற்ற பக்கங்களும் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியிருக்கும். ஆனால் எவ்வித முரண்பாடுகளும் இல்லாது போனால், வந்த நபர் தமக்கு சரியாகக் கூறியதாக முடிவிற்கு வருவதுடன், அதிலிருந்து நகல் எடுத்துக் கொண்டு தமது வீட்டிற்கு திருப்தியுடன் செல்கிறார். இத்தகையவற்றில், வெற்றி என்பதைக் காட்டிலும் ஏமாற்றங்களே மிக அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு சரியான திட்டம் என்னவெனில், நாடிகிரந்தத்தைப் பார்க்கச் செல்லும் நபர், சரியான அட்டவணைகளின் மற்றும் சரியான அயனாம்சங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவருடைய சாதக்கட்டத்தை எடுத்துக் கொண்டு செல்வது நல்லது.

 [*இது 1885 ஆண்டின் காலக் கட்டத்தில் திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் எழுதியது]


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: