இதுவரையில் இராசிச் சக்கரத்தில் சூரியன், சந்திரன், இராகு மற்றும் கேது ஆகியவற்றின் நகர்வினைப் பார்த்தோம். சூரியன், சந்திரன், இராகு மற்றும் கேதுவைப் பொருத்தவரையில் நகர்வின் கணக்கீட்டில் எவ்விதக் குழப்பமும் இல்லை. ஆனால் பிறக் கோள்களில் இந்த கணக்கீடானது எப்படி உள்ளது என்று பாருங்கள்.
கோள்கள்
|
சூரியனைச் சுற்றும் கால அளவு
|
வானியல் விதிப்படி
ஒரு நாளைக்கு இராசியில் நகர வேண்டிய அளவு
|
ஒரு நாளைக்கு இராசியில் நகரும் சராசரி அளவு (திருக்கணித
பஞ்சாங்கம்
01.01.15 –
05.01.15))
|
புதன்
|
88 நாட்கள்
|
04-05’-24”
|
01-35’
|
வெள்ளி
|
225 நாட்கள்
|
01-36’-00”
|
01-15’
|
செவ்வாய்
|
687 நாட்கள்
|
00-31’-26”
|
00-47’
|
வியாழன்
|
11.86 ஆண்டுகள்
|
00-04’-59”
|
00-05’
|
சனி
|
29.45 ஆண்டுகள்
|
00-01’-59”
|
00-06’
|
மேலே உள்ள அட்டவணையில், நகர வேண்டிய அளவிற்கும், நகரும் அளவிற்கும் வித்தியாசம் நிறையவே உள்ளது. வானியல் கணக்கோடு ஒத்துப்போக வேண்டிய பஞ்சாங்கக் கணக்கில் வித்தியாசம் ஏற்படுமாயின், இராசியில் கோள்களின் நகர்வும் தவறாக ஆகும் அல்லவா? ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இரண்டு கணக்கீடுகளும் சரியாகவே இருக்கும். குழப்பமாக இருக்கிறதா? இதனைச் சரிசெய்வதற்கு ஒரு ஆயுதம் இருக்கிறது. அதன் பெயர் ‘கோள்களின் வக்கிரம்’.
அது என்ன வக்கிரம். பொதுவாக சோதிட பெருமக்களும், பஞ்சாங்கம் கணிப்பவர்களும் பயன்படுத்தும் வார்த்தை ‘கோள்களின் வக்கிரம்’.
வக்கிரம் என்ற சொல்லிற்கு பின்னோக்கி நகர்தல் என்றே பெரும்பாலான சோதிட விற்பன்னர்கள் கூறுகின்றனர். வானில் கோள்கள் ஒரு இயற்பியல் விதிப்படி, கடிகாரச் சுற்றில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றும் கோள், தன் நிலையிலிருந்து விடுபட்டு, எதிர் சுற்றில் சுற்றுமானால், அந்தக் கோள் சுற்றுப்பாதையிலிருந்து தூக்கி வீசி எறியப்படும் என்பது இயற்பியல் விதி. எனவே பின்னோக்கி நகர்தல் என்பது இயற்கைக்கு முரணானது.
வக்கிரம் பற்றி தேடியத் தகவல்கள் எல்லாம், பின்னோக்கி நகர்தல் எனும் ஒற்றை வரி பதிலிலேயே முடிகின்றன. பெரும்பாலான சோதிடத்தகவல் வலைப்பூக்களும் அப்படித்தான் பகிர்கின்றன. ‘வகுப்பு’ நடத்தும் ஆசிரியர் கூட தமது பதிவில் அவ்வாறே எழுதியிருந்தார்.
ஆனால் தமிழோவியம் (www.tamiloviyam.com) எனும் வலைப்பூவில் – சோதிடரத்னா திரு எஸ். சந்திரசேகரன் அவர்களின் – நீங்களும் சோதிடர் ஆகலாம் எனும் நெடிய பதிவில், வக்கிரம் பற்றி மிகவும் அற்புதமாக, வானியல் கருத்தோடு எழுதியிருந்தார். அவரது பதிவில் வந்த விளக்கப் படத்தையே இங்கு பயன்படுத்தப் போகிறேன். பின்னர், நான் முதுகலை சோதிடவியல் படித்தபோது, சோதிட ஆசிரியர் திரு கே.ஆர். சுப்பிரமணியன் அவர்கள் தொகுத்தளித்த பாடத்திட்டத்தில், வக்கிரம் பற்றித் தெளிவாக எழுதி இருந்தது. வேறு ஏதேனும் வலைப்பதிவில் வக்கிரம் பற்றி விரிவு இருப்பின் தெரியப்படுத்துங்கள்.
கோள்களின் வக்கிரம் தொடரும்….
No comments:
Post a Comment