வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஒன்று (தொடர்ச்சி)
வரையறையும் அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]
5. மீனத்தின் குறியீடு இரண்டு மீன்களின்#
வடிவம்; கும்பத்தின் வடிவம் (தண்ணீர்) பானையுடன் உள்ள மனிதன்; மிதுனத்தின் குறியீடு
ஒரு ஆணும் பெண்ணும்; (முன்னவர்) ஒரு குச்சியுடனும் (பின்னவர்) ஒரு யாழுடனும், ஒரே இருக்கையில்
இருவரும் அமர்ந்திருப்பர்; தனுசுவின் குறியீடு
கீழ்பாகம் குதிரையின் உடலுடன் கூடிய ஒரு மனிதன்; மகரத்தின் குறியீடு ஒரு முதலையானது
மானின் தலையுடன்; துலாத்தின் குறியீடு (கையில்) தராசுடன் உள்ள மனிதன்; கன்னியின் குறியீடு
படகில் ஒரு இளம்பெண் (ஒரு கையில்) தானியக்கதிருடன் (மற்றொரு கையில்) ஒரு விளக்குடன்.
இதரக் குறியீடுகள் உயிரினங்களின் பெயரின் வடிவிற்கு@ உரிய வகையில் அழைக்கப்படும்
வடிவில். இராசிகள் வசிக்கும் இடங்கள் என்பன, அத்தகைய உயிரினங்கள் இயல்பில் வசிக்கும்
இடங்களாகும்.
குறிப்புகள்
(சிதம்பரம் அய்யர்)
# மீனத்தின் வடிவம்
என்பது இரண்டு மீன்கள் அருகருகே, ஒன்றின் வால் அருகே ஒன்றின் தலை எனும் வகையில்.
@ அதன்படி, மேசத்தின்
வடிவம் செம்மறி ஆடு; ரிசபத்தின் வடிவம் காளை; கடகத்தின் வடிவம் நண்டு; சிம்மத்தின்
வடிவம் சிங்கம்; விருச்சிகத்தின் வடிவம் தேள்.
இந்த பத்தி மற்றும்
பத்தி 4, ஆகியவை ஹோரை சோதிடத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மிக முக்கியாமாகப் பயன்படுகிறது
– அதாவது தொலைந்துபோன பொருட்கள் போன்றவற்றை அறிவதற்கு.
குறிப்புகள்
(நிமித்திகன்)
இன்றையக் காலத்தில்
இராசிகளின் வடிவம் என்பது பட விளக்கத்துடன் எளிதில் காணக் கிடைக்கிறது. ஆனால், (1600
ஆண்டுகளுக்கு முந்தைய) வராக மிகிரர் காலத்திலும், (130 ஆண்டுகளுக்கு முந்தைய) சிதம்பரம்
அவர்களின் காலத்திலும் பட விளக்கத்தினை வார்த்தைகள் மூலமே விளக்க வேண்டியிருந்தது.
அதன் பொருட்டே, குறியீடுகளை (இராசியின் வடிவங்களை) இருவரும் விளக்கியுள்ளனர்.
சிதம்பரம் அவர்கள்
குறிப்பிடும் ஹோரை சோதிடம் என்பது தற்போது மிகவும் பரவலாக உள்ள ‘பிரசன்ன’ சோதிடம் அல்லது
‘குறி சொல்லுதல்’ என்பதாகும். இது பற்றி தமது முன்னுரையில் அவர் கூறியிருக்கிறார்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment