இலவச சாதக பலன்கள்- உங்கள் உதவியோடு
உங்களுக்கு சாதக பலன்கள் இலவசமாக
வேண்டுமா? ஒருவருக்கு ஒரு கேள்வி அல்லது
ஒரு பிரச்சனைக்கு இலவசமாக பதில் வழங்கப்படும்.
அத்துடன் சாதகக் குறிப்பேடும் வழங்கப்படும்.
சாதகரின்
பெயர், பிறந்த தேதி, பிறந்த
நேரம், பிறந்த இடம் மற்றும்
அவரின் குருதிவகை(Blood Group) ஆகிய குறிப்புகளையும், ஒரே
ஒரு கேள்வி அல்லது பிரச்சனையையும்
எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரும்
வரிசைப்படி முன்னுரிமையில் பதில் வழங்கப்படும்.
தற்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உதவும் வகையில், அரசியல் பாகுபாடுகளை மறந்து,
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களால்
முடிந்த நிதி உதவியினை கீழ்வரும்
முகவரிக்கு அனுப்பி வைத்து அதன்
வரைவோலை அல்லது காசோலை நகலினை
உங்கள் தகவல்களுடன் எனக்கு மின்னஞ்சலில்அனுப்பி வைக்கவும்.
நிதி உதவி என்பது குறைந்தபட்சம்
ரூ.500/- என இருப்பது நலம். அதனினும் குறைவாக இருப்பினும் தவறில்லை.
"CHIEF MINISTER'S PUBLIC RELIEF FUND"
addressed to :
The Joint Secretary to Government and Treasurer,
Chief Minister's Public Relief Fund,
Finance Department,
Secretariat,
Chennai-600 009.
Chennai-600 009.
சிறு குறிப்பு: நான் ஏற்கனவே ஒரு
சிறு தொகையினை அனுப்பி வைத்துவிட்டேன். நான்
சோதிடத்தினை தொழிலாக செய்பவன் அல்ல
என்பதால் அதிலிருந்து வருமானம் எதிர்பார்ப்பவன் அல்ல. எனது பணியிலேயே
எனக்குப் போதுமான வருமானம் வருகிறது.
எனவே சோதிடக் கல்வி அறிவை
இச்சிறு பொது நலனிற்கு உங்களின்
துணையோடு பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். [இலவசம்
என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை]
அன்புடன்
நிமித்திகன்.
[தவிர்க்க இயலாத சில காரணங்களால்
நிமித்திகனில் பதிவுகள் கடந்த இரண்டு மாதங்களாக
எழுத முடியவில்லை. அடுத்த வாரம் முதல்
மீண்டும் பதிவுகள் வரும்].
2 comments:
அருமை! உங்களின் இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.
Post a Comment