வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஐந்து
பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்
1. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தின் பொழுது உதய இராசியானது சந்திரனுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தால், அக்குழந்தை பிறக்கும்போது தந்தை அருகில் இருக்க மாட்டார் – மற்றும் அத்தகைய நிலையில், சூரியனானது 9வது அல்லது 8வது வீட்டில் இருந்து, அது சர இராசியாக இருக்குமானால், தந்தையானவர் வெளிநாட்டில் இருப்பார்; அந்த வீடு ஸ்திர இராசியாக இருந்தால் சொந்த நாட்டில் இருப்பார்; அந்த வீடு உபய இராசியாக இருந்தால், சொந்த நாட்டிற்கு வந்து கொண்டிருப்பார்.
2. பிறக்கும் நேரத்தில், சனியானது உதய இராசியில் இருந்தால் அல்லது செவ்வாய் மறைவு இராசியில் இருந்தால், அல்லது சந்திரனானது (1) புதனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் இருந்தால், தந்தையானவர் அருகில் இருக்க மாட்டார்.
குறிப்பு (திரு சிதம்பரம் அய்யர்):
(1)
புதனும் சுக்கிரனும் சந்திரன் இருக்கும் இராசிக்கு இருபுறமும் அல்லது சந்திரன் இருக்கும் இராசியிலோ.
3. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது செவ்வாயின் திரேக்கானத்தில் இருந்தால்(1) மற்றும் சுப கோள்கள் உதய இராசியிலிருந்து 2வது மற்றும் 11வது வீட்டில் இருந்தால், அந்த பிறப்பானது ஒரு பாம்பாக இருக்கும். உதய இராசியில் அசுபக்கோள்(2) இருக்குமானால், மற்றும் செவ்வாயின் திரேக்கானம் உதயமாக இருக்குமானால், அதே நேரத்தில், சுபக்கோள்கள் 2வது மற்றும் 11வது வீட்டில் இருக்குமானால், அக்குழந்தையானது உடலில் பாம்பு சுற்றி பிறக்கும்.
குறிப்பு (திரு சிதம்பரம் அய்யர்):
(1)
செவ்வாயின் இத்தகைய திரேக்கானங்கள் – மேசத்தின் முதல் திரேக்கானம், கடகத்தின் இரண்டாவது, சிம்மத்தின் மூன்றாவது, விருச்சிகத்தின் முதலாவது, தனுசுவின் இரண்டாவது, மீனத்தின் 3வது.
(2)
மேசம், கடகம் தேய்பிறைச் சந்திரனாக இருக்குமானால் சிம்மம் மற்றும் விருச்சிகம்.
குறிப்பு:(நிமித்திகன்)
இங்கு serpent எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதால், பாம்பு என மொழிபெயர்த்துள்ளேன். ஆனால், serpent எனும் அச்சொல் தொப்புள் கொடியைக் குறிப்பதாகக் கொள்வதே சரி. அதன்படி, கொடி சுற்றி பிறப்பதைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
குறிப்பு: இலவச சாதகம் பெறுவதற்கு பதிவு செய்திட கடைசி நாள் 31.12.2015
No comments:
Post a Comment