Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, December 23, 2015

கொடி சுற்றி பிறக்கும் குழந்தை - பிருகத் ஜாதகா – 56

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பகுதி   -  ஐந்து

பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்

4.  பிறக்கும் நேரத்தில், சூரியனானது நாற்கால் இராசியில் இருக்க, மற்ற கோள்கள் வலிமைமிகுந்து பொது இராசிகளில் இருந்தால், அந்த பிறப்பானது இரட்டை பிறவியாக இருக்கும்.


5. பிறக்கும் நேரத்தில், மேசம், சிம்மம் அல்லது ரிசபம் உதய இராசியாக இருந்தால், மற்றும் சனி அல்லது செவ்வாய் அத்தகைய இராசியில் இருந்தால், அந்த பிறப்பில் குழந்தையானது, நவாம்சத்தின்(1) உதய இராசிக்கு உடைய உடலின் பாகங்களில் தொப்புள் கொடி சுற்றி பிறக்கும்.


குறிப்பு (திரு சிதம்பரம் அய்யர்):

(1)     அந்த நேரத்தில் நவாம்சத்தின் உதய நவாம்சம் மேசமாக இருந்தால், கழுத்தை சுற்றியும், ரிசபமாக இருந்தால், முகத்தினைச் சுற்றியும், அதுபோல், பகுதி-I, பத்தி-4ல் குறிப்பிடப்பட்ட உடல் பாகங்களில் சுற்றி பிறக்கும்.

6. பிறக்கும் நேரத்தில், உதய இராசி மற்றும் சந்திரனோடு(1) அல்லது சந்திரனானது சூரியனுடன் சேர்ந்து இருக்க அல்லது பாவக் கோளுடன் சேர்ந்திருக்கும் சூரியனோடு சந்திரன் சேர்ந்து இருக்க, வியாழனானது அவைகளோடு தொடர்பில் இல்லாமல் இருந்தால்அந்த குழந்தை தவறான வழியில் பிறந்ததாக இருக்கும்.

குறிப்பு(திரு சிதம்பரம் அய்யர்):

(1)     வியாழனானது ஏதேனும் ஒன்றுடனோ அல்லது மற்றவற்றுடனோ தொடர்பில் இருந்தால், அது  தவறான வழியில் பிறந்ததாக இருக்காது.

யவனேஸ்வரரின் கருத்துப்படி, உதய நவாம்சமோ அல்லது நவாம்சத்தில் சந்திரனோடு, வியாழன் தொடர்பில் இருந்தால்அக்குழந்தை தவறான வழியில் பிறந்ததாக இருக்காது..
காராகரின் கருத்துப்படி, சந்திரனானது வியழனின் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தால், அல்லது அது வியாழனேடு சேர்ந்து ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தால், அல்லது சந்திரன் திரேக்கானத்தில் அல்லது வியாழனின் நவாம்சத்தில் இருந்தால்அக்குழந்தை தவறான வழியில் பிறந்ததாக இருக்காது.


7. பிறக்கும் நேரத்தில், இரண்டு பாவக் கோள்கள்(1) ஏதேனும் ஒரு அசுப வீட்டில்(2) இருக்க, அந்த வீடானது சூரியனிலிருந்து 5வது, 7வது அல்லது 9வது இருக்குமானல், அந்தக் குழந்தையின் தந்தையானவர் பாதுகாவலில் இருப்பார். சூரியனானது ஏதேனும் ஒரு சர இராசியில் இருந்தால், தந்தையானவர் வெளி நாட்டில் அவ்வாறு இருப்பார்; அது ஸ்திர இராசியில் இருந்தால், அவரது சொந்த நாட்டிலேயே பாதுகாவலில் இருப்பார்அது உபய இராசியில் இருந்தால் தந்தையானவர் சொந்த நாட்டிற்கு திரும்பும் வழியில் இருப்பார்.


குறிப்பு(திரு சிதம்பரம் அய்யர்):

(1)     செவ்வாய் மற்றும் சனி
(2)     மேசம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், தேய்பிறை சந்திரனாக இருந்தால் கடகம், மற்றும் புதனானது அசுபக் கோள்களுடன் இணைந்திருந்தால் மிதுனம், கன்னி.



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15



No comments: