வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஐந்து
பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்
13. பிறப்பானது உதய இராசி அல்லது உதய நவாம்சம், அதில் எது வலிமை மிகுந்ததோ அதைச் சார்ந்த இடத்தில்(1) இருக்கும். அத்தகைய இராசி அல்லது நவாம்சம் சரமாக இருந்தால், பிறப்பானது சாலையில் நிகழும்; ஸ்திரமாக இருந்தால் ஒரு கட்டிடத்தில்(2) நிகழும். உதய நவாம்சம் ஒரு வர்கோத்தமமாக இருந்தால், பிறப்பானது தாயின் சொந்த வீட்டில் இருக்கும்.
குறிப்பு (சிதம்பரம் அய்யர்):
(1)
இந்த இடங்கள், பகுதி-1, பத்தி-5ல் குறிப்பிடப்பட்டவாறு. நாம் இராசிக்கட்டத்தில் உள்ள பல்வேறு இராசிகளுக்கு உரிய பல்வேறு இடங்களைக் கொடுத்துள்ளோம்.
மேசமானது ஆடுகளின் உறைவிடம், மலைகள், படைவீரர்களின் பாசறை, ஒரு நெருப்பு சார்ந்த இடம், உலோக சுரங்கங்கள் மற்றும் விலைமதிப்புமிக்க கற்கள் கிடைக்கும் சுரங்கங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்
ரிசபமானது காடுகள், மலையடிவாரங்கள், யானைகள் மற்றும் கன்றுகளின் கொட்டடி, விவாசாயிகளின் வசிப்பிடம் ஆகியவற்றைக் குறிக்கும்
மிதுனமானது, பெண்கள் இசை மற்றும் ஓவியம் கற்ற இடம், அது காதலர்களுக்கு காதல் செய்தி சொன்ன இடம் அல்லது காதல் விளையாட்டு செய்த இடம் ஆகியவற்றைக் குறிக்கும்
கடகமானது, நெல் வயல், ஏரிகள், மணற்கரைகள் இளமங்கையர் தொடர்புடைய இடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்
சிம்மமானது, காடுகள், எளிதில் புகமுடியா இடங்கள், குகைகள், காடு சூழ்ந்த மலைகள் மற்றும் காட்டுவாசிகள் வசிக்கும் இடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்
கன்னியானது பெரும் புள்வெளிகள், பெண்களின் தூங்கும் அறைகள், மற்றும் பெண்கள் பயிலும் பள்ளிகள் ஆகியவற்றைக் குறிக்கும்
துலாமானது சுங்கசாவடிகள், நடுவீதிகள், கடைத்தெருக்கள், நகரை நோக்கி செல்லும் சாலைகள், அங்காடிகள், தானியங்கள் விளையும் உயரமான நிலங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்
விருச்சிகமானது குகைகள், பாதுகாக்கப்பட்ட நகரங்கள், சாக்கடைகள், நஞ்சு மிகுந்திருக்கும் கற்களும் மலைகளும் உள்ள இடங்கள், பாம்பு பொந்துகள், தேள் பொந்துகள் ஆகியவற்றைக் குறிக்கும்
தனுசுவானது குதிரைகள் அல்லது குதிரைப்படை வீரர்கள் அல்லது படைவீரர்கள், யாகம் அல்லது கொண்டாட்ட பூமி, அல்லது வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றைக் குறிக்கும்
மகரமானது ஆறுகள், தோட்டங்கள், காடுகள், ஏரிகள், தண்ணீர் கரையோரம் அல்லது சாக்கடைகள் ஆகியவற்றைக் குறிக்கும்
கும்பமானது பறவைகள், பெண்கள், மதுவிற்பனையாளர்கள் அல்லது சூதாடிகள் தொடர்புடைய இடங்கள், ஆகியவற்றைக் குறிக்கும்
மீனமானது கோவில்கள், வேதியர்கள், தீர்த்த சாலைகள், ஆறுகள், கடல்கள் இவற்றோடு தொடர்புடைய இடங்களைக் குறிக்கும்.
(2)
இரண்டுமாக (சரம் மற்றும் ஸ்திரம்) இருந்தால், பிறப்பானது வீட்டின் வெளி நடைபாதையில் நிகழும்.
14. பிறக்கும் நேரத்தில், செவ்வாயும் சனியும் ஒரே வீட்டில் இருக்க, அவற்றிலிருந்து சூரியன் அல்லது சந்திரன்(1) 5வது அல்லது 9வது வீட்டில் இருந்தால், குழந்தையானது அதன் தாயால் புறக்கணிக்கப்படும்; ஆனால் சூரியன் அல்லது சந்திரனானது வியாழனோடு தொடர்பில் இருந்தால், அக்குழந்தை தாயால் புறக்கணிக்கப்பட்டாலும் அது நல்ல நிலையில் நீண்டு வாழும்.
குறிப்பு(சிதம்பரம் அய்யர்):
(1)
பிற நூல்களின்படி சந்திரனானது மறைவு வீட்டில் இருந்தால்.
15. உதய இராசியில் உள்ள சந்திரனை ஒரு பாவக் கோள்(1) தொடர்பில் இருக்க, செவ்வாயானது 7-ம் வீட்டில் இருக்க, அல்லது உதய இராசியுடன் ஒரு பாவக் கோள்(2) தொடர்புடன் இருக்கும்போது சந்திரனிலிருந்து செவ்வாயும் சனிய்ம் 11-ம் வீட்டில் இருக்க, தாயால் புறக்கணிக்கப்படும் குழந்தையானது இறந்து போகும். சந்திரனானது ஒரு வலிமை மிகுந்த கோளுடன் தொடர்பில் இருக்க (3), புறக்கணிக்கப்பட்ட குழந்தையானது, வலிமை மிக்க கோளுக்கு உரிய வகுப்பைச் சார்ந்த மனிதர்களின் கைகளில் அக்குழந்தை கிடைக்கப் பெற்று உயிர்வாழும். தொடர்பில் உள்ள பாவக் கோளானது வலிமை மிகுந்து இருக்குமானால், புறக்கணிக்கப்பட்ட குழந்தையானது பிறர் கையில் கிடக்கப் பெற்று பின்னர் இறந்து போகும்.
குறிப்பு(சிதம்பரம் அய்யர்):
(1)
சனி அல்லது செவ்வாய்
(2)
சூரியன்
(3)
வியாழன் சந்திரனுடன் தொடர்பில் இருந்தால், எந்தவித தீய சக்தியாலும் குழந்தையை அழிக்க முடியாது
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment