வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஒன்பது
அஷ்டவர்க்கம்..தொடர்ச்சி
ஆயுர்தய கணக்கீடுகள்
(திரு சிதம்பரம் அவர்களின் சிறப்பு குறிப்பு)
மாபெரும்
உழைப்பில், பராசரர் உருவாக்கிய ஹோரை சாஸ்திரத்தில், 32 வகையான சிறப்பு முறைகளில், ஒரு
மனிதனின் வாழ்நாளைக் காண்கிறார். அவைகள் முறையே:-
1.
|
பிண்டாயுர்தயம்
|
12
|
2.
|
துருவாயுர்தயம் அல்லது நைசார்கிகாயுர்தயம்
|
4
|
3.
|
இரம்சிகாயுர்தயம்
|
4
|
4.
|
அம்சகாயுர்தயம்
|
4
|
5.
|
அஷ்டவர்க்க ஆயுர்தயம்
|
4
|
6.
|
விஷயாயுர்தயம்
|
2
|
7.
|
நட்சத்திரம்சகாயுர்தயம்
|
2
|
மொத்தம்
|
32
|
1. பிண்டாயுர்தயம்.
இது 3 விதங்களில்
பிரிக்கப்படுகிறது: (1) யவணாச்சாரியரின் கருத்துப்படி (பகுதி-7, பத்தி-1), (2) ஜீவசர்மாவின்
கருத்துப்படி (பகுதி-7, பத்தி-9), (3) பத்திராயனரின் கருத்துப்படி.- அதாவது ஒவ்வொரு
கோளும் அதன் உச்ச நிலையில் இருக்கும்போது கொடுக்கும் ஆண்டுகள் என்பது 100 ஆண்டுகளின்
ஏழில் ஒரு பகுதியாகும்.
மேற்கூறிய மூன்றில், ஒவ்வொன்றும் 4 துணை பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன: (அ) நீச்சார்தஹரணம் கணக்கீடானது
நீச்ச நிலையில் அதிகபட்ச கால அளவு என்பதில் பாதியாகும். (ஆ) நீச்ச பாவ கணக்கீடானது நீச்ச
நிலையில் கால அளவு கிடையாது. (இ) கிரிதஹரணம் கணக்கீடானது கால அளவினைக் குறைக்கும்.
(ஈ) அகிரதஹரணம் கணக்கீட்டின்படி, கால அளவின்
எவ்வித குறைப்பும் கிடையாது.
இவ்வாறு
பிண்டாயுர்தயம் 12 வகைகளாக உள்ளது.
2. துருவாயுர்தயம்.
இது நைசார்கிகாயுர்தயம்
என்றும் அழைக்கப்படுகிறது (பகுதி-8, பத்தி-9). மேலே கூறியவாறு, இவை 4 வகைகளாக, மேலே
குறிப்பிடப்பட்ட 4 பிரிவுகளைச் (அ, ஆ, இ, ஈ) சார்ந்து கணக்கிடப்படும்.
3. இரம்சிகாயுர்தயம்
இதன்படி,
கோள்களின் ஆண்டுகள் என்பது, சூரியன் முதல் சனி வரை முறையே, 16, 20, 9, 8, 9, 25,
26 ஆகும். இவைகளும் மேலே கூறியவாறு நான்கு பிரிவுகளாகும்.
4. அம்சகாயுர்தயம்
இது சத்யாச்சாரியரின்
முறையாகும், பகுதி-7, பத்தி-9ல் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கீட்டில், சில நிலைகளில்,
ப்ரக்ரமனுகதம் என்று அழைக்கப்படும் முறையில் வேறுபடுகிறது. இரண்டு கணக்கீட்டு முறைகள்
மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரக்கப்பட்டு – கிரிதவிரித்திகம் மற்றும் அக்கிரிதவிரித்தகம்
என – அதாவது வேறு சிலரின் கூற்றுப்படி ஆண்டுகள்
அதிகரிக்கப்படுதல், பராசரர் ஹோரை சாஸ்த்திரத்தின்படி, ஆண்டுகள் குறைக்கபடுகிறது.
இவ்வாறு நமக்கு நான்கு விதமான அம்சகாயுர்தயம் கிடைக்கிறது.
..அடுத்து
. அஷ்டகவர்க்க ஆயுர்தயம்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment