Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, December 2, 2016

வியாழன் - சனி அஷ்டவர்க்க பலன்கள் - பிருகத் ஜாதகா – 89



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்பது

அஷ்டவர்க்கம்..தொடர்ச்சி

வியாழன்-சனி அஷ்டவர்க்க பலன்கள்

 (திரு சிதம்பரம் அவர்களின் சிறப்பு குறிப்பு)


வியாழனின் அஷ்டவர்க்க பலன்கள்

வியாழனின் அஷ்டவர்க்கத்தில் ஐந்தாம் இடத்தில் உள்ள எண்ணிக்கையானது ஒருவருக்கு எத்தனை மகன்கள் என்பதைக் கூறும்.  அவற்றில் எத்தனை இளவயதில் மரணத்தினைச் சந்திக்கும் என்பது எத்தனைக் கோள்கள் பகை அல்லது நீச்ச வீட்டில் இருக்கின்றன என்பதைப் பொருத்து அமையும்.

முன்பு கூறியவாறு, திசை அல்லது பகுதியை கணக்கிட்டு அந்தப் பகுதியில் பண அறை அல்லது பண்டக அறையை அமைக்க வேண்டும்.

வெள்ளியின் அஷ்டவர்க்க பலன்கள்

குறைப்பிற்கு பிறகு உள்ள வெள்ளியின் அஷ்டவர்க்கத்தில், அதிக புள்ளிகள் உள்ள வீட்டின் வழியே வெள்ளி கடக்கும்போது, சாதகருக்கு மனைவி, நிலம் அல்லது சொத்துக்கள் கிடைக்கும்.
முன்பு கூறியவாறு, திசை அல்லது பகுதியை கணக்கிட்டு அந்தப் பகுதியில் படுக்கை அறையை அமைக்க வேண்டும்.

சனியின் அஷ்டவர்க்க பலன்கள்

சனியின் அஷ்டவர்க்கத்தில், இலக்கினம் முதல் சனி இருக்கும் வீடு வரையில் உள்ள எண்ணிக்கையைக் கூட்டவும், அதுபோலவே, சனி முதல் இலக்கினம் வரை உள்ள வீடுகளில் உள்ள எண்ணிக்கையையும் கூட்டவும். இந்த இரண்டின் மொத்தமும் எவ்வளவோ அத்தனை ஆண்டுகள் அந்த சாதகர் நோய்வாய்ப்படுவார் அல்லது வறுமையில் வாடுவார் என்பதைக் கொடுக்கும். இரண்டு கூடுதல்களையும் கூட்டவும்; அந்த கூடுதலின் ஆண்டில், அந்த மனிதரின் வாழ்க்கையில் ஆபத்துகளைச் சந்திப்பார்.

இதேபோன்ற குறிப்பு செவ்வாயின் அஷ்டவர்க்கத்திற்கும் பொருந்தும்.

சூரியனும் சந்திரனும், சனியின் அஷ்டவர்க்கத்தில் எண்ணிக்கை குறைவாக உள்ள வீட்டினைக் கடக்கும்போது (சாதகரின் இறப்பிற்கு உரிய ஆண்டில்), அவர் மரணமடைவார்.

முன்பு கூறியவாறு, திசை அல்லது பகுதியை வரையறை செய்தால் கிடைக்கும் இடத்தில், கழிவுப் பொருட்களைச் சேமிக்க வேண்டும்.

…..அடுத்து முழு அஷ்டக வர்க்க பலன்கள்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16


No comments: