வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஒன்பது
அஷ்டவர்க்கம்..தொடர்ச்சி
முழு (சர்வ) அஷ்டவர்க்க பலன்கள்
(திரு சிதம்பரம் அவர்களின் சிறப்பு குறிப்பு)
5. சனி, இலக்கினம், செவ்வாய் ஆகியவை இருக்கும் வீடுகளில் உள்ள எண்ணிக்கையைக் கூட்டவும். அந்த எண்ணிக்கைக்குரிய வயதில் அவர் நோய்வாய்படுவதுடன் பல்வேறு கவலைகளையும் அடைவார் .
6. இராகு, செவ்வாய், சனி ஆகியவை இருக்கும் வீடுகளில் உள்ள எண்ணிக்கையைக் கூட்டவும். அந்த எண்ணிக்கைக்குரிய வயதில் அவர் நஞ்சு, ஆயுதம், காயங்கள் ஆகியவற்றால் துன்பம் அடைவார்.
7. சுபக் கோள்கள் இருக்கும் வீடுகளில் உள்ள எண்ணிக்கையைக் கூட்டவும். அந்த எண்ணிக்கை உள்ள வயதில், அவருக்கும் குழந்தை, சொத்து போன்றவைக் கிட்டும்.
8. இலக்கினத்திலிருந்து எட்டாம் வீட்டிற்கு உரிய அதிபதியின் அஷ்டவர்க்க மொத்த எண்ணிக்கையை, முழு அஷ்டவர்க்கத்தில் இலக்கினத்திலிருந்து எட்டாம் வீட்டிற்கு உரிய எண்ணிக்கையால் பெருக்கவும். அதனை 12-ஆல் வகுக்கவும்; மீதியானது மாதம் எனக் கொண்டால், மேசத்திலிருந்து கணக்கிட வரும் இராசிக்கு உரிய மாதத்தில் (அவருடைய கால முடிவில்) மரணமடைவார்.
அதுபோலவே, ஒருவரின் தந்தையின் இறப்பின் மாதத்தினை, இத்தகைய கணக்கீட்டின் மூலமாக, 9-வது வீட்டினைக் கொண்டு அறியலாம், அதுபோலவே, 4-வது வீட்டினைக் கொண்டு தாயாரின் இறப்பின் மாதத்தினை அறியலாம்.
9. முழு அஷ்டவர்க்கத்தினைக் கொண்டு, திசை அல்லது பகுதிகளைக் கண்டு பிடிக்கவும். மாட்டுக் கொட்டகை, நெல் வயல், வேளான் பணிகள் நடைபெற வேண்டிய திசைகள் அல்லது பகுதிகளில் மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட திசை அல்லது பகுதிகளில் தவிர்த்து விடவும்.
……சர்வ
அஷ்டவர்க்க பலன்கள் தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment