வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பத்து
துணைத் தொழில்கள்..தொடர்ச்சி
கோள்களின் துணைத் தொழில்கள்-பகுதி-2
3. நவாம்ச அதிபதி வியாழனாக இருந்தால், ஒரு மனிதன் தமக்குரிய சொத்துக்களைப் பிராமினர்கள், தேவர்கள், அறிஞர்கள் ஆகியோர் மூலமும், சுரங்கங்கள்(1), அதுபோன்றவை(2), நல்வினைகள்(3), ஆகியவற்றின் மூலமும்; அது சுக்கிரனாக இருந்தால், சொத்துக்களை இரத்தினங்கள்(4) வெள்ளி, இதர உலோகங்கள், பசுக்கள், எருமைகள் ஆகியவற்றின் மூலமும், அதிபதி சனியாக இருந்தால், சொத்துக்களைக் கடின உழைப்பின் மூலமும்(5); துன்புறுத்தல் மூலமும்(6); அவரது நிலைக்குத் தாழ்ந்து வேலை செய்வதன் மூலமும், சுமைகளைத் தாங்கியும் சொத்துக்களை அடைவார். இவ்வாறு சாதகர்கள், 10-ம் வீட்டின்(7) அதிபதி நவாம்சத்தில் இருக்கும் வீட்டின் அதிபதியின் துணைத் தொழில்கள் மூலம் சொத்துக்களைப் பெறுவதுடன், அந்த அதிபதியின்(8) அந்தரதசையில் பெறுவார்.
குறிப்பு:
(1)
இந்த நூலில் “அகரா- Akara” என குறிப்பிடப்பட்டிருப்பது, தங்கம், வெள்ளிச் சுரங்கங்களும் உள்ளடங்கியது, உப்பு உற்பத்தி செய்யும் இடம் அல்லது யானைகள் வசிக்கும் இடம்.
(2)
ஒப்பந்த தொழில்
(3)
பலிச் சடங்குகள், பரிசுகள், கொடைகள், நோன்புகள், வழிபாடுகள், ஆசான் அல்லது முன்னோடிகளுக்கு பணி செய்தல்
(4)
அதாவது, வைரங்கள், மாணிக்கங்கள் அதுபோன்றவை
(5)
அதாவது நடந்து செல்லுதல் போன்றவை
(6)
சுயமாக துன்புறுத்திக்கொள்ளுதல் அல்லது மற்ற உயிரினங்களைத் துன்புறுத்துதல்.
(7)
இலக்கினத்திலிருந்து, சந்திரனிலிருந்து, சூரியனிலிருந்து
(8)
பகுதி-8, பத்தி-20-படியும் மற்றும் பகுதி-20ல், பத்தி-11 குறிப்பிடப் பட்டிருப்பதுபடி கோள்களின் வலிமைக்கு ஏற்ப.
4. அத்தகைய யோகக் கோள்(1) ஒரு நட்பு வீட்டில் இருந்தால்(2), அம்மனிதன் (அந்தக் கோளின் அந்தர தசையில்) நண்பனின் மூலம் சொத்துக்களை அடைவார். அத்தகைய யோகக் கோள் ஒரு பகை வீட்டில் இருந்தால், அம் மனிதன் அவனது எதிரியிடமிருந்து சொத்துக்களைப் பெறுவார்; அத்தகைய கோள் அதன் சொந்த வீட்டில் இருந்தால், அவனது வீடு அல்லது அவனது வீட்டின் மூலம் சொத்துக்களை அடைவார். சூரியனானது யோகக் கோளாக இருந்தால், அது உச்ச வீட்டில் இருந்தால், அவரது சொந்த வலிமையால் சொத்துக்களை அடைவார். (பிறந்தபோது), வலிமை மிகுந்த கோள் 11-ம் வீடு, இலக்கினம் அல்லது 2-ம் வீட்டில் இருந்தால், அவர் பல வழிகளில் சொத்துக்களை அடைவார்(3)
குறிப்பு:
(1)
அதாவது, இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து அல்லது சூரியனிடமிருந்து 10வது வீட்டில் உள்ள கோள், அல்லது நவாம்சத்தில் இலக்கினத்திலிருந்து, சந்திரனிலிருந்து, சூரியனிலிருந்து 10-ம் வீட்டிற்கு உரிய கோள்.
(2)
பிறப்பின் போது
(3)
அதாவது, அவர் எந்த துணைத் தொழிலினை மேற்கொண்டாலும் அதில் வளம் பெறுவார்.
துணைத் தொழில்கள் முடிவுற்றது
அடுத்து – பகுதி-11, இராஜ யோகம் அல்லது அரசர்களின் பிறப்பு
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment