வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஒன்பது
அஷ்டவர்க்கம்..தொடர்ச்சி
அஷ்டகவர்க்க ஆயுர்தயம்
(திரு சிதம்பரம் அவர்களின் சிறப்பு குறிப்பு)
5. அஷ்டகவர்க்க ஆயுர்தயம்.
இந்த முறையானது மேலே குறிப்பிட்ட முறையிலிருந்து, அதாவது ப்ரக்ரமனுகதம் முறையிலிருந்து மாறுபட்டது. இவ்விரண்டு கணித முறைகள், மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, கிரிதவிருத்தி மற்றும் அக்கிரிதவிருத்தி என மேலே குறிப்பிட்டவாறு பராசர ஹோரைப்படி பிரிக்கப்படுகிறது. இவ்வாறு, நமக்கு நான்கு வகையான அஷ்டகவர்க்க ஆயுர்தயம் கிடைக்கிறது. இந்த நான்கு முறைகளில் ஒன்று இக்குறிப்பின் கடைசியில் விவரிக்கப்பட உள்ளது.
6. விஷயாயுர்தயம்.
இது இரண்டு வகையானது – ஒன்று பராசரர் முறையிலும் மற்றொன்று ப்ரக்ரியாமாலா என்று அழைக்கப்படும் முறையிலும் ஆகும். இவை அஷ்டவர்க்க அடிப்படைத் தன்மையினைச் சார்ந்தவை.
7. நட்சத்திர அம்சகாயுர்தயம்.
இது இரண்டு வகையானது – ஒன்று காலச்சக்கர முறையிலும், மற்றொன்று நட்சத்திர முறையிலும் ஆனது.
இவ்வாறு 32 வகைகைள் பராசரரால் குறிப்பிடப்படுகிறது, அதே வேளையில், ஒவ்வொறு வகையும் எவ்வாறு கணிதப்படுத்தப்படுகிறது என்பதையும் விளக்குகிறது. இந்த 32 வகைகளில், மிக முக்கியமான ஒன்றை வராகமிகிரர் பகுதி-7ல் விளக்குகிறார். ஆயுர்தயம் பற்றிய மேலும் விவரங்களுக்கு, பராசரர் மற்றும் இதர ஆசிரியர்களின் நூல்களை படிக்குமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அஷ்டவர்க்க முறைகளின் விவரங்களை இங்கு நாம் பார்க்கலாம். கீழே வரும் அட்டவணை இவற்றினை விளக்கும்.
இராசி குணாகரம் அல்லது இராசிமண்டலக் காரணிகள்
மேசம்
|
7
|
துலாம்
|
7
|
ரிசபம்
|
10
|
விருச்சிகம்
|
8
|
மிதுனம்
|
8
|
தனுசு
|
9
|
கடகம்
|
4
|
மகரம்
|
5
|
சிம்மம்
|
10
|
கும்பம்
|
11
|
கன்னி
|
5
|
மீனம்
|
12
|
கிரக குணாகரம் அல்லது கோள்களின் காரணிகள்
சூரியன்
|
5
|
வியாழன்
|
10
|
சந்திரன்
|
5
|
வெள்ளி
|
7
|
செவ்வாய்
|
8
|
சனி
|
5
|
புதன்
|
5
|
-
|
-
|
சூரியனின் அஷ்டவர்க்கத்தில் மேசத்திலிருந்து உள்ள எண்களை, இராசி குணாக அட்டவணையில் அதற்குரிய எண்களால் பெருக்கி, அவ்வாறு பெருக்கிவந்தவைகளை மொத்தமாகக் கூட்டவும்.
…அஷ்டவர்க்க ஆயுர்தயம் தொடரும்….
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment