வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து எட்டு
முடிவுரை
பத்தி 1,2,3:
சாதகம் குறித்த இப்படைப்பில், கீழ்வரும் 27 பகுதிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
1. வரையறை மற்றும் அடிப்படைக் கோட்பாடுகள் (இராசிக் கட்டம்)
2. வரையறை மற்றும் அடிப்படைக் கோட்பாடுகள் (கோள்கள்)
3. விலங்குகள் மற்றும் தாவரங்களின் சாதக அமைப்பு
4. நிஷேக காலம் அல்லது கருவுறும் வேளை
5. பிறப்பின் நேரத்தோடு தொடர்புடைய செய்திகள்
6. பால அரிஷ்டம் அல்லது இளமைக்கால மரணம்
7. ஆயுர்தயம் அல்லலது வாழ்க்கையின் கால அளவினைத் தீர்மானித்தல்
8. கோள்களின் பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள் எனப்படும் தசா மற்றும் அந்தரதசா.
9. அஷ்டவர்க்கம்
10. தொழில்கள்
11. ராஜ யோகம் அல்லது அரசப் பிறவி
12. நாபச யோகங்கள்
13. சந்திர யோகங்கள்
14. இரட்டைக் கோள்களின் யோகங்கள்
15. சன்னியாசி யோகங்கள்
16. நட்சத்திரங்கள் அல்லது நட்சத்திரத்தில் சந்திரன்
17. இராசியில் பல்வேறு வீடுகளில் சந்திரன்
18. இராசியில் பல்வேறு வீடுகளில் சூரியன், செவ்வாய் மற்றும் இதர கோள்கள்
19. கோள்களின் பார்வைகள்
20. பாவங்களில் கோள்கள்
21. பல்வேறு வர்க்கங்களில் கோள்கள்
22. பல்வேறு யோகங்கள்
23. அசுப யோகங்கள்
24. பெண்களின் சாதகம்
25. இறப்பு
26. தொலைந்த சாதகத்தினை வடிவமைத்தல்
27. திரேக்காணங்கள்
பத்தி 4,5,6:
நான் யாத்திரை எனும் நூலில் எழுதியதின் சுருக்கப் பொருளை இங்கு தருகிறேன். அவை:
1. பிரசன்ன பிரபேதம்
2. திதிபலம்
3. நட்சத்திரபிதானம்
4. வாரபலம்
5. முகூர்த்த நிர்தேசம்
6. சந்திர பலம்
7. இலக்கின நிஷயம்
8. இலக்கின பேதம்
9. கிரகசுஹி
10. அபவாதம்
11. மிஸ்ரகம்
12. தனுவேபனம்
13. குஹையகபுஜம்
14. ஸ்வப்னம்
15. ஜனனவிதி
16. கிரஹயஜனம்
17. பிரயாணம்
18. சகுனருதம்.
இவை மட்டுமின்றி, விவேககாலம் மற்றும் கிரஹகரணம்(கோள்கள்) போன்றவற்றைப் பற்றியும் படைத்திருக்கிறேன்.
மேலே கூறப்பட்ட பொருட்களைப் பற்றி எனது வானியல் நூலான பஞ்சசித்தாந்தத்தில் நான் விளக்கியிருக்கிறேன். இவ்வாறு சோதிடக்கலையின் பிரிவுகளான வானியல், சாதகம், சம்ஹிதை(1) ஆகியவற்றை அறிவார்ந்த மாணவர்களுக்காக படைத்துள்ளேன்.
குறிப்பு: 1. வராகமிகிரரின் படைப்புகளான பஞ்ச சித்தாந்திகா என்பது வானியல் பற்றியும், பிருகத் ஜாதகம் என்பது சாதகம் பற்றியும், பிருகத் சம்ஹிதா என்பது சம்ஹிதை பற்றியும் விளக்குகிறது.
முடிவுரை.... தொடரும்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment