Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, November 23, 2014

பிருகத் ஜாதகா – தமிழில்-10



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

அறிமுகம்(தொடர்ச்சி)


            கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பெரும்பான்மையான வானியலாளர்கள் நம்பிக்கைப்படி இரட்டைச் சூரியன், இரட்டைச்சந்திரன், செவ்வாய் மற்றும் இதர கோள்கள், ஒன்று ஸ்தூலம் அல்லது உருவம் கொண்டும், மற்றொன்று சூட்சமம் அல்லது உருவமின்றி இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு கோளும் தனித்துவம் கொண்ட ஆன்மாவுடன் இருக்குமானால், அந்தக் கோள்கள் முந்தைய நிகழ்வுகளைச் சுமந்து வந்து கொடுக்கும் செயல் காரணியாக இருக்கிறது எனும் கோட்பாடு உடைந்து விடும். அது மட்டுமின்றி, இந்தக் கருத்தை மனம் ஏற்பதில் எவ்வித தயக்கமும் தேவையில்லை ஏனெனில், கோள்களானது தனக்கு மேல் உள்ள உயர் சக்தியின் செயல் முகவராக செயல்பட்டு ஒருவரது முந்தைய கர்மாவின் வினைக்கு ஏற்ப பலன்களையும், தண்டனைகளையும் வழங்கும் அதேவேளையில் அம்மனிதன் அவனது சுய நிலையை பல்வேறு செயல்களில் முன்னேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்கும் கருவியாகவும் செயல்படுகிறது. ஒருவன் தான் திருடியதற்காக நீதிபதியால் தண்டிக்கப்படுகிறான்அவன் முன்வினைப்பயனால் விதியின் போக்கால் திருடுகிறான். ஆனால் தண்டனைக் கொடுக்கும் அதிகாரி ஒரு முகவர் போல் செயல்படுகிறார். மற்றொரு எடுத்துக்காட்டாக: ஒருவன் நாட்டின் நலனுக்காக மதிப்புமிக்க ஒரு சிறு பணியை மேற்கொள்கிறான்; தலைமைப் பொறுப்பில் உள்ளவர், உள்ளூர் அதிகாரியிடம் அந்த மனிதனைச் சிறப்பு செய்ய ஆணை இடுகிறார்; உள்ளூர் அதிகாரி கட்டளையை நிறைவேற்றுகிறார்; அந்த மனிதனின் சேவைக்கு உடனடி வெகுமதி கிடைக்க, அந்த அதிகாரி முகவராக செயல்படுகிறார் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, கோள்கள் மனிதனின் தலைவிதியை சுட்டிக் காட்டுகின்றன என்பதோடு, அத்தகைய விதியின் செயல்பாட்டினை அவனுக்கு அளிக்கின்றன என நாம் முடிவிற்கு வரலாம். இந்த உலகமானது, மதிப்பு, தண்டனை, தகுதி என அனைத்தும் கலந்த கலவையாகும். கோள்கள் என்பன சிறப்பிக்கும் மற்றும் தண்டனை வழங்கும் அதிகாரிகள் என்பதுடன், மனிதனின் தன்னிச்சையான செயல்களுக்கு விருதும் வழங்குகின்றன.

            இதே கருத்தை மற்றொரு வகையிலும் குறிப்பிடலாம்: கோள்களின்  செயல்பாடானது பல்வேறு காரணிகளின் மொத்த செயல்பாடாக உள்ளது, சில நல்லவை, சில தீயவை, மனிதனின் விதிப்பயன் ஒரு செயல்பாட்டிலிருந்து மற்றொன்றிற்கு இட்டுச் செல்கிறது, அவனது முன்வினைப்பயனின் வினையாக அது இல்லாமல் இருப்பினும், அவனது அறிவார்ந்த செயலால் பயன் அடையும் காரணியாகவும் செயல்படுகிறது. கோள்களின் செயல்பாட்டினைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் போனால்கோள்களின் இருப்பிட நிலைகளுக்கேற்ப கிடைக்கக் கூடிய குறிப்பிட்ட பலன்கள் குறித்து ஒருவருக்கு வழங்கப்படும் அறிவுரைகள், அதாவது சோதிட அறிவியலின் பெரும்பகுதி பொருளற்று போய்விடும். எனவே கோள்கள் என்பன சிறை அதிகாரிகள் மற்றும் வெகுமதி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் எனும் நிலையினைக் காட்டிலும் உயர்வானவை. எடுத்துக்காட்டாக, நிஷேகா (கருத்துரு) பற்றிக் குறிப்பிடும் நான்காவது தலைப்பில் (பிருகத் ஜாதகா) ஒரு மனிதன் சிறப்பான நிலையை அடைவதற்கு,  கோள்களின் நல்ல அமைப்பினைப் பெற்றிருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது: வானியல் மேதையும் சோதிட அறிஞருமான பராசரர், அத்தகைய ஒரு மணித்துளியை எதிர்பார்த்து காத்திருந்து, யமுனை நதிக்கரையின் தீவில் ஒரு படகோட்டியின் மகளுடன் இணைந்து அதன் விளைவாகப் பிறந்தவர் மாமுனிவர் வேத வியாசர். அதே போன்ற ஒரு சூழலில் ஒரு பிராமன சோதிடர் ஒரு குயவரின் மகளுடன் இணைந்து, அதன் விளைவாகப் பிறந்தவர் சாலிவாகனன்.

            எனவே மனிதனானவன் தன்னிச்சையாக செயல்படுபவன் இல்லை என்பதை, ஷேக்ஸ்பியரின்நீ விரும்பியவாறுஎனும் நாடகத்தில் வரும் ஒரு பத்தியின் மூலம் அறியலாம்:

            உலகம் ஒரு நாடக மேடை
            ஆண்களும் பெண்களும் அதில் நடிகர்கள் மட்டுமே
            அவர்கள் உள்வரும் வழியும் வெளிசெல்லும் வழியும் கொண்டிருக்கிறார்கள்
            ஒருவன் தான் நடிக்கும் நாடகத்தில் பல்வேறு பாத்திரம் ஏந்துகிறான்
            அவனின் நடிப்பு ஏழு பருவங்களுடையது



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014



No comments: