வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
அறிமுகம்…(தொடர்ச்சி)
அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி என்னவெனில், மனிதனின் விதிப்பயனிற்கும் கோள்களுக்கும் இடையேயான, அவ்வாறு ஏதேனும் இருப்பின், அது தொடர்பாக உள்ள விளைவுகளை ஆராய்வதுதான்: ஒரு மனிதன் தனது முன் வினைப் பயன் காரணமாக நன்மையும் தீமையும் அடைகிறான் என்றால், எந்தக் கோள்கள் அந்த நன்மைக்கும் தீமைக்கும் காரணமாக இருக்கின்றன. இங்கு சோதிடம் ஒரு அறிவியல் என்று நம்பும்போது, அது இரண்டு பள்ளிகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில் ஒரு பிரிவினர் கோள்கள் காரணமாய் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றனர், அதே சமயம் மற்றொரு பிரிவினர் இதனை மறுக்கின்றனர், அதாவது கோள்கள் கண்மூடித்தனமாகவும் எந்திரத்தனமாகவும் மனிதனின் தற்போதைய விதியினை மட்டுமே குறிப்பிடுகின்றன என்கின்றனர். பிந்தையதற்கு ஏதுவாக கூறப்படுவது யாதெனில் முந்தைய விதியின் நேரடி தாக்குதலுக்குட்பட்டு மனிதன் துன்பமோ மகிழ்ச்சியோ அடைகிறான் என்றால், பின் எப்படி கோள்களின் செயல்பாடுகளினால் நிகழ்வுகள் ஏற்படும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியும், அவ்வாறானது கற்பனையானது என்பது மட்டுமல்லாமல் முற்றிலும் முரண்பாடானதும் கூட: ஒரு மனிதன் தன் மகனை இழப்பானேயானால், அது அவனது விதியின் பயன் என அவர்கள் கூறுகின்றனர், அதாவது அவன் அதுபோன்று முன்பிறவியல் வேறு யாருக்கோ செய்ததின் விளைவு என்கின்றனர், ஆனால் அது பிறந்த சாதகத்தில் லக்கனத்தில் இருந்து செவ்வாய் 5ஆம் இடத்தில் இருப்பதால் ஏற்படவில்லை என்பதுடன், கோள்களின் நிலை என்பது குறிப்பை மட்டுமே உணர்த்துகிறதே அன்றி, மனிதனுக்கு துன்பத்தையோ மகிழ்ச்சியையோ தரவல்லது அல்ல என்கின்றனர். இத்தைகைய மக்கள் ஒரு சாதாரண மனிதனின் பார்வையில், ஒரு நிகழ்விற்கு பல்வேறு காரணிகள் இருக்கும் என்பதை மறந்து விடுகின்றனர் – அதாவது ஒவ்வொரு காரணமும் அதன் அதன் போக்கில் முழுமையாக செயலாற்றும் என்பதனை. இந்திய இலக்கியங்கள் என்பன நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ளன – ஒவ்வொரு நிகழ்விற்கும் உடனடி காரணங்கள் உள்ளன. சில விசித்திரமான காரணங்கள், கடவுளின் செயலுக்கும் மனிதனின் விதிக்கும் உள்ள வேறுபாடுகள் நமக்கு புரிவதில்லை. நாம் ஒன்றிரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிட முடியும். கங்கையானவள் சபிக்கப்பட்டு மனித பிறவி எடுக்க, அதே போல் அஷ்ட (எட்டு) வசுக்களும் சபிக்கப்பட்டு பிறவி எடுக்க, அந்த எட்டு வசுக்களில் ஏழுபேர் பிறந்த உடனேயே சொர்க்கத்திற்கு திரும்பி விடுகிறார்கள்; சந்தானு எனும் அரசர் வேட்டைக்கு செல்லுகையில் கங்கைக் கரையில் கங்கையச் சந்தித்து திருமணம் செய்து கொள்கிறார், ஒரு நிபந்தனையுடன், அதாவது கங்கையின் தனிப்பட்ட செயல்களில் அவர் தலையிட்டால், அவரை விட்டு கங்கை பிரிந்து விடுவாள் எனும் வாக்குறுதியுடன். மொத்தத்தில் எட்டு குழந்தைகள் பிறக்கின்றன. தாயானவள் முதல் ஏழு குழந்தைகளையும் கங்கையாற்றில் எறிந்து விடுகிறாள்; அரசன் அவள் மேல் கொண்ட காதலினால் மௌனமாக இருந்து விடுகிறான். மேற்கொண்டு எவ்வித மனித இழப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தடுக்க முயலும்போது, கடைசிக் குழந்தையான –மகாபாரத்தின் எதிர்காலமான பீஷ்மரை- மன்னனிடம் கொடுத்துவிட்டு கங்கை மறைந்து விடுகிறாள். மறுபடியும், தசரத சக்கரவர்த்தி, ஒரு அடர்ந்த காட்டிற்கு வேட்டையாட செல்கிறார்; அருகில் கலகலவெனும் ஓசையைக் கேட்கிறார், தவறுதலாக ஒரு காட்டு யானை தண்ணீர் பருகுவதாக நினைத்துக் கொண்டு, ஓசை வந்த திசை நோக்கி அம்பு எய்த, அங்கே ஒரு பாத்திரத்தில், வெகு தூரத்தில் இருக்கும் தன் வயதான பெற்றோருக்காக, தண்ணீர் மொண்டுகொண்டிருக்கும் வேடன் மீது தாக்க அவன் மரணம் அடைகிறான். மரண வேதனையில் அழும் வேடனின் குரல் மன்னனுக்கு கேட்க அங்கு சென்று தன் தவறை உணர்கிறான், அடுத்த வினாடியே வேடனின் வயதான பெற்றோரைச் சந்தித்து மன்னிப்பும் கேட்கிறான். ஆனல் அந்த முதியவர், மன்னனுக்குச் சாபம் அளிக்கின்றார் அதாவது மன்னன் தனது வயதான காலத்தில் தன் மகனை இழந்து இதுபோன்று ஒரு மரணத்தை அடைவார் எனும் விதிப்போக்கினை உணர்ந்து சாபம் இடுகிறார். இதற்கிடையில், பிருகு முனிவரின் சாபத்தால், அதாவது அவரது மனைவி தனது பாதுகாப்பில் இருந்த ஒரு அசுரனை விடுவிக்க மறுத்தபோது, கோபம் கொண்டு அவனை அழித்ததால், தன் மனைவியை பிரிந்து வாழம் நிலை ஏற்படுவதை உணர்ந்த விஷ்னு தானும் மனித பிறவி எடுக்கிறார். இராவனனால் பாதிக்கப்பட்ட தேவர்கள் விஷ்னுவிடம் முறையிட்டு தங்களைப் பாதுகாக்க வேண்டுகின்றனர். இராவணன் தனக்கு மனிதர்கள் மற்றும் குரங்குகளைத் தவிர எவராலும் மரணம் ஏற்படக்கூடாது என பிரம்மாவிடம் வரம் பெற்றதாலும், அதே நேரத்தில் தசரதர் தமக்கு ஒரு மகன் வேண்டும் என்று விஷ்னுவிடம் வேண்டியாதாலும், விஷ்னு தசரதனின் மகன் இராமனாக அவதாரம் எடுக்கிறார். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக, இராமன் தன் இளம்மனைவியுடன் அரசவையை விட்டு தண்டக காட்டிற்கு செல்கிறார். மகனின் பிரிவால் துயருற்ற தசரதன் இறக்கிறார். இராவணன் சீதையைத் தூக்கிச் செல்ல, அவளின் பிரிவால் இராமன் துயரம் அடைகிறார். அவர் இலங்கைக்குச் சென்று எதிரியை அழித்து, தன் மனைவியை மீட்டு வருகிறார்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014
|
No comments:
Post a Comment