வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
அறிமுகம்…(தொடர்ச்சி)
மீண்டும், சொர்க்கங்கள் அண்டத்தை உருவாக்குகின்றன என்றால், மனிதன் பிண்டமாக இருக்கிறான். மறுமொழியில், ஒவ்வொரு மனிதனும், இந்த பிரபஞ்சத்தைத் துள்ளியமாகப் பிரதிபலிக்கும் ஒரு சிறு உலகம். வெளியில் ஒன்றுமில்லாமல் தெரிந்தாலும், உள்ளுக்குள் செயல்படும் உலகம். அத்தகைய உலகத்தை மெய்ஞானத்தால் மட்டுமே ஒரு யோகியால் அறியமுடியும். மறைநிலை (அமானுஷ்ய) அறிவியல் இது பற்றி சொல்வதாவது:-
சூஷ்மநாடியில் பிராணவாயுவை (உயிர்வளி) எடுத்துக்கொள்ளும்போது, எட்டு விதமான இசையினை உணரமுடிவதுடன், தீ, வெளிச்சம், விண்மீன்கள், சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவையும் காணக் கிடைக்கும். மீண்டும், முன்பு சொன்ன பகுதி-VI-ல், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயானது, செவ்வாயும் சந்திரனும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளும்போது நிகழும் என வராகமிகிரர் கூறுகிறார். இது தொடர்பாக, சாரவளியின் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்.
“சந்திரன் நீர், செவ்வாய் நெருப்பு; பித்தம் என்பது நீரும் நெருப்பும் கலப்பதனால் ஏற்படுவது, பித்தமானது குருதியுடன் கலக்கும்போது, பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது".
எனவே, வெளியில் ஏற்படும் மாற்றங்களால், உள்ளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன, மேலும் மனிதனின் உடலின் ஒவ்வொரு உறுப்பும் அல்லது துளியும் அதன் பிரதிநிதியை சொர்க்கத்தில் வைத்துள்ளன. அவ்வாறு இருக்கும்போது, மேலே உள்ள கோள்கள் மற்றும் விண்மீன்கள் ஆகியவற்றிற்கும் கீழே உள்ள மனிதனுக்கும், ஒரு நுண்ணியத் தொடர்பு இருக்க, அத்தகைய நுண்ணியத் தொடர்பை உணரமுடியாமலும் உள்ளது.
நாம் இப்போது, சோதிடக் கணிப்புகள் பொய்யாவதற்கான சில காரணங்களைப் பார்ப்போம்; அதில் மிக முக்கியமானதை இப்போது எடுத்துக் கொள்வோம்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014
|
No comments:
Post a Comment