கல்லூரிப் பேராசிரியரை ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு கணிதப் பாடம் எடுக்கச் சொன்னால், பாடத்தைப் பார்த்தவுடன் ஆசிரியர் எளிதில் விளக்கம் சொல்லிவிடுவார். ஆனால் பாவம் மாணவன், அவனுக்கு அவன் நிலையில் புரிந்துகொள்ள கொஞ்சம் கடினமாகவே இருக்கும். வான் மண்டலத்தைப் பற்றி ஒரு மாணவன் போல் நான் படிக்க முயன்றதும் அப்படித்தான். அது பற்றி நான் புரிந்துகொண்டதைக் கொஞ்சம் எளிதாக கூறுகிறேன்.
வான் மண்டலம் என்பது பரந்து விரிந்த பிரபஞ்சம். ஆதியும் அந்தமும் இல்லாது விரிவடைந்துகொண்டே இருக்கும் மாபெரும் குமிழுக்கு மையப்புள்ளி என்பதோ அல்லது சுற்றளவு என்பதோ கற்பனைக்கும் எட்டாத கணக்கீடு. எனவே பிரபஞ்சத்திற்கு வான்மத்திய ரேகை (Celestial Equator) என்பது எங்கிருந்து கணக்கிடுகின்றோமோ அங்குள்ள அந்த விண்மீன் அல்லது அந்த கோள் எங்கு உள்ளதோ அதனையொட்டியே தீர்மானிக்கப் படுகிறது.
அதாவது, ஒரு விண்மீனின் அல்லது கோளின் துருவ அச்சிற்கு (pole) இணையாக வான் துருவ அச்சும் (celestial pole) அவற்றின் மத்திய ரேகைக்கு (equator) இணையாக வான்மத்திய ரேகையும் (Celestial Equator) கணக்கிடப்படுகிறது. இது நமது பூமிக் கோளிற்கும் பொருந்தும்.
![]() |
வான் அச்சிற்கு ஊடாக கோளின் அச்சு |
அதே நேரத்தில், பூமியிலிருந்து இதைக் கணக்கிடும்போது, அதில் சிறிது மாற்றமும் செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், பூமி தனது சுழல் அச்சில் இருந்து 23.40 சாய்ந்துள்ளது. அதனை ஈடு செய்தே, இதனைக் கணக்கிட வேண்டியுள்ளது. அவ்வாறு கணக்கிடும்போது, பூமியின் மத்திய ரேகைக்கும் (earth equator) வான் மத்திய ரேகைக்கும்(celestial equator) கோண வித்தியாசம் மாறுபாடு அடைகிறது. அதுபோலவே, துருவ அச்சிலும் கோண மாறுபாடு உண்டாகிறது. எனவே பூமியின் சுற்று வட்டப்பாதைப் போக்கிலும் இந்த மாற்றம் காணப்படுகிறது.
![]() |
புவி அச்சும் வான் அச்சும் |
வான் அறிஞர்களின் கூற்றுப்படி, நமது பூமிக்குத் தொடர்புடைய வான் மத்திய ரேகையின் (அதாவது சூரிய சுற்றுப் பாதையை ஒட்டிய பாதையில்) கீழ் வரும் 15 விண்மீன் கூட்டங்கள் உள்ளன. (http://en.wikipedia.org/wiki/Celestial_equator).
அவற்றை அதன் ஆங்கில (கிரேக்கம்/லத்தீன்) பெயரிலேயே கீழே காண்போம்.
Pisces
|
Monoceros
|
Virgo
|
Cetus
|
Canis
Minor
|
Serpens
|
Taurus
|
Hydra
|
Ophiuchus
|
Eridanus
|
Sextans
|
Acquila
|
Orion
|
Leo
|
Aquarius
|
இங்கு விண்மீன் கூட்டம் என்பது, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் காணப்படும் விண்மீன்களின் தொகுப்பாகும். அது ஒரு விண்மீனாகவும் இருக்கலாம், அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட விண்மீன்களின் தொகுப்பாகவும் இருக்கலாம். இந்த விண்மீன்களின் தொகுப்பானது பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காதவை என்றாலும், நமது பூமிக் கோளை ஒட்டிய வான்மத்திய ரேகையில் மேலே குறிப்பிடப்பட்டவைதான் உள்ளதாக வான் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், பூமியின் சாய்வுக்கோணச் சுற்றுப்பாதை மற்றும் சூரியனின் சுற்றுவட்டப்பாதையானது, வான் மத்திய ரேகையின் சுற்றுவட்டப்பாதைக்கு சற்று கோண மாறுபாட்டில் இருப்பதால், விண்மீன் கூட்ட எண்ணிக்கையில் மாறுபாடு உள்ளதாக கூறுகின்றனர். அதனை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment