வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஒன்பது
அஷ்டவர்க்கம்
அஷ்டவர்க்கம் உருவாக்கம்
8.
இவ்வாறு கோள்களுக்குரிய நல்ல இடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன; பிற இடங்கள் தீமைதரும் இடங்கள்(1). ஒரு இடமானது நல்ல அல்லது தீய விளைவினைத் தரும் என்பதானது, அது அந்தக் கோளுக்கு அதிக நல்லதைக் கொண்டிருந்தால் நல்லது அல்லது அதிக தீயதைக் கொண்டிருந்தால் தீயது எனக் கொள்ள வேண்டும்(2).
இத்தகைய இடங்கள் அனைத்தும் பிறக்கும் நேரத்தில் கோள்கள் இருக்கும் இடங்களைக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும். கோள்கள், உபசய(3) வீடுகளை அல்லது நட்பு அல்லது உச்ச வீடுகளைக் கடந்து செல்லும் நிலையில், அத்தகைய வீடுகள் அல்லது இராசிகள் மிக சுபமாக இருந்தால், தீமையைக் காட்டிலும் முழுதுமாக நன்மைகளைக் கொடுக்கும்; மேலும் அக் கோள்கள் அபசய வீடுகள்(5) அல்லது பகை அல்லது நீச்ச வீடுகளைக் கடந்தால், அத்தகைய வீடுகள் அல்லது இராசிகள் மிக அசுபமாக இருந்தால், நன்மையைக் காட்டிலும், முழுதுமாக தீமைகளைக் கொடுக்கும்(6).
குறிப்புகள் (திரு சிதம்பரம் அவர்கள்):
(1)
எடுத்துக்காட்டாக, சூரியனுக்கு அதன் இடத்திலிருந்து 3வது, 5வது, 6வது, 12வது வீடுகள் தீய இடங்கள். இலக்கினத்திலிருந்து, சந்திரனுக்கு 1வது, 2வது, 5வது, 7வது, 8வது, 9வது, 12வது வீடுகள் தீய இடங்கள், அதுபோலவே, பிறவற்றிற்கும்.
(2)
அஷ்டவர்க்க அட்டவணையை உருவாக்கும்போது, நன்மை தரும் இடங்களை புள்ளிகளாலும், தீமை தரும் இடங்களை கோடுகளாலும் குறிப்பது வழக்கம். கீழ்வரும் சாதகத்திற்கு, செவ்வாயின் அஷ்டவர்க்க அட்டவணையை உருவாக்குவோம்:-
இலக்கினம்
சுக்கிரன்
|
சூரியன்
|
சந்திரன்
புதன்
|
|
|
இராசி சக்கரம்
|
வியாழன்
|
|
செவ்வாய்
|
|
||
|
|
சனி
|
|
செவ்வாய்க்கு நன்மை தரும் இடங்களைப் புள்ளிகளாலும், தீமை தரும் இடங்களை கோடுகளாலும் குறிப்போம். அதற்கான விடையானது கீழ்வருமாறு இருக்கும்:-
000
= 3
IIIII
= 5
|
000
= 3
IIIII
= 5
|
000
= 3
IIIII
= 5
|
000
= 3
IIIII = 5
|
000 = 3
IIIII
= 5
|
செவ்வாயின் அஷ்டவர்க்கம்
|
0000
= 4
IIII = 4
|
|
00000 = 5
III
= 3
|
00000
= 5
III = 3
|
||
00 = 2
IIIIII
= 6
|
0
= 1
IIIIIII
= 7
|
00000
= 5
III
= 3
|
00
= 2
IIIIII = 6
|
இந்த அட்டவணையானது, எடுத்துக்காட்டாக செவ்வாயனது மேச இராசியைக் கடந்து செல்லும் நிலையில், அதன் நன்மையின் நிலை என்பது 3/8 எனவும், தீமையின் நிலை என்பது 5/8 எனவும் இருக்கும். அதாவது, அதன் வலிமையில் அது தீமையை 5/8 – 3/8 அல்லது 2/8 என வழங்கும். அதுபோலவே மற்ற இடங்களுக்கும் கணக்கிடல் வேண்டும்.
(3)
இவைகள் முறையே இலக்கினத்திலிருந்து 3வது, 6வது, 10வது, 11வது ஆகும். ஸ்ரீ தேவ கீர்த்தியின் கருத்தின்படி, சந்திரனுக்கும் அவ்வாறே ஆகும்.
(4)
அல்லது அவைகளின் சுவஷேத்திரம் அல்லது மூலதிரிகோண வீடுகளும் - ஸ்ரீ தேவ கீர்த்தியின் கருத்தின்படி.
(5)
உதய இராசியிலிருந்தும் மற்றும் சந்திரனிலிருந்தும் – மேலே கூறிய வகையில்.
(6)
அதன்படி, மேலே குறிப்பிடப்பட்ட செவ்வாயின் அஷ்டவர்க்கத்தின்படி, செவ்வாயானது மகரத்தின் வழியாக கடந்து செல்லும்போது (அதன் உபசய வீடு), 2/8 என குறைவாகத் தராமல், சுப பலன்களை முழுமையாகத் தரும்; மிதுனத்தின் வழியாக செல்லும்போது (அதன் அனுபசய இராசி) அது 2/8 என குறைவாகத் தராமல், அசுப பலன்கள முழுமையாக தரும்.
--
… மேலும் தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment