வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஒன்பது
அஷ்டவர்க்கம்..தொடர்ச்சி
சூரியனின் அஷ்டவர்க்க பலன்கள்
(திரு சிதம்பரம் அவர்களின் சிறப்பு குறிப்பு)
சூரிய
அஷ்டவர்க்கத்தில் [இங்கு ஒரு கோளின் அஷ்டவர்க்கம் என்பது குறைப்பிற்கு முந்தைய அக்கோளின்
அஷ்டவர்க்கம் ஆகும்], அஷ்டவர்க்கத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 9வது வீட்டில்
இருக்கும் எண்ணைக் கொண்டு, குறைப்பிற்கு பிறகு உள்ள எண்களின் மொத்த எண்ணிக்கையால் பெருக்க
வேண்டும். அவ்வாறு பெருக்கியதை 27-ஆல் வகுத்து, மீதியை எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த
எண்ணிக்கையை அஸ்வினி முதல் எண்ணிவர, முடியும் நட்சத்திரத்தினைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
சனிக் கோளானது அத்தகைய நட்சத்திரத்தினையோ அல்லது அதன் திரிகோண(முக்கோண) நட்சத்திரங்களையோ
கடக்கும்போது, அந்தக் கால அளவில் நடைபெறும் தசாவானது அசுபக்கோளின் தசாவாக இருந்தால்,
சாதகரின் தந்தையோ அல்லது தந்தைவழி மாமனோ இறந்து
போவார் அல்லது வறுமையில் வாடுவார்.
சூரியனின்
அஷ்டவர்க்கத்தில் எண்ணிக்கை எதுவும் இல்லாத வீட்டினைச் சூரியன் கடக்கும்போது, எந்த
வேளையையும் தொடங்கக் கூடாது.
அத்தகைய
காலத்தில், சாதகர் வறுமை, நோய் அல்லது பிரச்சனைகள் சூழ்ந்து இருப்பார்.
அஷ்டவர்க்கத்தில்
சூரியன் இருக்கும் இடத்திலிருந்து எட்டாவது வீட்டில் உள்ள எண்ணைக் கொண்டு, குறைப்பிற்கு
பிறகு உள்ள எண்களின் மொத்த எண்ணிக்கையால் பெருக்க வேண்டும். பெருக்கி வந்த தொகையை
12-ஆல் வகுக்க வேண்டும். மீதியை மேசத்திலிருந்து கணக்கில் கொண்டால் (மாதம்), அந்த மாதத்தில்
அல்லது அதன் முக்கோண இராசிக்கு உரிய மாதத்தினைச் சூரியன் கடக்கும்போது, (அவரது ஆயுள்
முடிவு காலத்திற்கு உரிய ஆண்டில்), அந்த மாதத்தில் சாதகர் இறந்து போவார்.
திரிகோண
இராசிகளான மேசம், சிம்மம், தனுசு என்பது போல் உள்ள நான்கு பிரிவுகளில் உள்ள திரிகோண
இராசிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ள வேண்டும். அதில் எந்த பிரிவின் கூடுதல் அதிகம்
என்பதைக் காண வேண்டும். அத்தகைய திரிகோண இராசிகளின் திசை அல்லது பகுதி எது எனக் காண
வேண்டும் (பகுதி-II, பத்தி-19-ல் குறிப்பு(6)). ஒரு வீட்டின் வழிபாட்டிற்கு உரிய இடம்,
அத்தகைய திசையே ஆகும்.
அடுத்து..
சந்திரனின் அஷ்டவர்க்க பலன்கள்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment