Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, November 1, 2016

வீடுகளில் கோள்களின் வலிமை - சுருக்கத் தொகுப்பு



ஒவ்வொரு கோளும் 12 வீடுகளில் இருக்கும் வலிமையினை இதுவரையில் பார்த்தோம். ஏற்கனவே கூறியபடி, கோள்களின் வலிமையைப் பொறுத்தவரையில்  பல்வேறு சோதிட நூல்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதே வேளையில், உச்சம், நீச்சம் பற்றிய நிலைகளில் பொதுவான நிலையில்தான் உள்ளன. அதிலும் இராகு கேதுக்கள் விதிவிலக்காக உள்ளன. நட்பு, பகை, சமம் ஆகியவற்றில்தான் கருத்துவேறுபாடுகள் மிகுந்துள்ளன. நாம் இதுவரையில் பகுத்தாய்ந்த வகையில், கோள்கள் தாங்கள் இருக்கும் வீடுகளில் உள்ள நிலையினை ஒரு தொகுப்பாகக் காண்போம்.


இந்தத் தொகுப்பில், நட்பு, சமம் என்பதில் பல்வேறு நூல்களில் சமம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளவை இங்கு நட்பாகவும், நட்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளவை சமம் எனவும் சில வீடுகளுக்கும் கோள்களுக்கும் இடையே, சிறு மாறுபாடுகள் உள்ளன. இருப்பினும் இதனால் பலன் உரைப்பதில் எவ்வித தவறானக் கணக்கீடும் ஏற்படப் போவதில்லை. ஆனால் பகை என்பதாக இருந்தால் அதனை அதி முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டும்இராகு கேதுவைப் பொருத்தவரையில், ஒரு தெளிவற்ற நிலை இருப்பதாலும், இராகு கேதுக்கள் உடன் இருக்கும், அல்லது பார்வை பெறும், அல்லது பார்வை தரும் கோள்கள், இடங்கள் பொருத்தே பலன் உரைக்கப்பட வேண்டும் என்பதாலும், இங்கு நட்பு-பகை விவரத்தினை முழுமையாகத் தர இயலவில்லை.



கோள்களுக்கும் வீடுகளுக்கும் இடையே உள்ள விவரங்களைத் தொகுத்து வழங்கியவாறே, கோள்களுக்கு இடையே உள்ள வலிமை நிலையினைத் தொகுத்து காண்போம்.

கோள்கள்
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
இராகு
கேது
சூரியன்
-
நட்பு
நட்பு
சமம்
நட்பு
பகை
பகை
பகை
பகை
சந்திரன்
நட்பு
-
சமம்
நட்பு
சமம்
சமம்
சமம்
பகை
பகை
செவ்வாய்
நட்பு
நட்பு
-
பகை
நட்பு
சமம்
சமம்
பகை
பகை
புதன்
நட்பு
பகை
சமம்
-
சமம்
நட்பு
சமம்
சமம்
சமம்
வியாழன்
நட்பு
நட்பு
நட்பு
பகை
-
பகை
சமம்
சமம்
சமம்
வெள்ளி
பகை
பகை
சமம்
நட்பு
சமம்
-
நட்பு
நட்பு
நட்பு
சனி
பகை
பகை
பகை
நட்பு
சமம்
நட்பு
-
நட்பு
நட்பு
இராகு
பகை
பகை
பகை
சமம்
சமம்
நட்பு
நட்பு
-
-
கேது
பகை
பகை
பகை
சமம்
சமம்
நட்பு
நட்பு
-
-

இங்கு, இராகு கேதுக்களைப் பொறுத்தவரையில், சூரியன், சந்திரன் ஆகிய இரண்டும் பகை என்பதை நாம் பதிவு செய்துள்ளோம். மற்ற கோள்களுக்கிடையே, இராகு-கேதுவின் உறவு என்பது சோதிட நூல்களில் பதிவு செய்யப்பட்டவைகளே, இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

            ஒரு கோளின் முழு பலனைக் கணக்கிட சட்பலம் எனும் கணித முறையினைப் பயன்படுத்த வேண்டும். அந்தக் கணித முறைமைக்கு, கோள்களுக்கிடையேயான உறவுநிலையும், வீடுகளில் அவை இருக்கும் நிலையும் பயன்படும் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு கோள் முழுபலத்துடன் உள்ளதா இல்லையா என்பதை சட்பலத்தின் மூலமே அறிய முடியும்.

இருப்பினும் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ள அட்டவணைகள், சோதிட பலன் உரைத்தல் குறித்த பதிவின்போது பெரிதும் பயன்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அடுத்து… அஷ்டவர்க்கம் எனும் என்வகைக் கணிதம்


No comments: