வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
[சென்ற பதிவுகளில் அஷ்டகவர்க்கம் பற்றி ஆய்வு செய்தோம். இனி அஷ்டகவர்க்கம் பற்றி பிருகத் ஜாதகாவில் கூறப்பட்டிருப்பதைப் பார்ப்போம்]
பிருகத் ஜாதகா
பகுதி - ஒன்பது
அஷ்டவர்க்கம்
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் அஷ்டவர்க்கம்
[அஷ்டவர்க்கம் என்பது,
ஒரு கோளுக்கு உரிய நல்ல, தீய இடங்களை, அதாவது ஏழு கோள்களும் இலக்கினமும் ஒருவர் பிறக்கும்போது
இருக்கும் அந்த எட்டு இடங்களைக் கணக்கில் கொண்டு, குறியிடுவது.]
1. சூரியனுக்கு
உரிய நல்ல இடங்கள் முறையே, அது இருக்கும் இடத்திலிருந்து 1வது, 2வது, 4வது, 7வது,
8வது, 9வது, 10வது, 11வது வீடுகள் ஆகும்; செவ்வாய் மற்றும் சனியிலிருந்தும் அதே வீடுகள்
தான்; சுக்கிரனிலிருந்து 6வது, 7வது, 12வது வீடுகள்; வியாழனிலிருந்து 5வது, 6வது,
9வது, 11வது வீடுகள்; சந்திரனிலிருந்து 3வது, 6வது, 10வது, 11வது வீடுகள்; புதனிலிருந்து
3வது, 5வது, 6வது, 9வது, 10வது, 11வது, 12வது வீடுகள்; இலக்கினத்திலிருந்து 3வது, 4வது,
6வது, 10வது, 11வது 12வது வீடுகள், ஆகும்.
2. சந்திரனுக்கு
உரிய நல்ல இடங்கள் முறையே, இலக்கினத்திலிருந்து 3வது, 6வது, 10வது, 11வது வீடுகள் ஆகும்;
செவ்வாயிலிருந்து 2வது, 3வது, 5வது, 6வது, 9வஅது, 10வது 11வது வீடுகள்; அதற்கு(சந்திரனுக்கு)
1வது, 3வது, 6வது, 7வது, 10வது, 11வது வீடுகள்; சூரியனுக்கு 3வது, 6வது, 7வது, 8வது,
10வது, 11வது வீடுகள்; சனிக்கு 3வது, 5வது, 6வது, 11வது வீடுகள்; புதனுக்கு 1வது,
3வது, 4வது, 5வது, 7வது, 8வது, 10வது, 11வது வீடுகள்; வியாழனுக்கு 1வது, 4வது, 7வது,
8வது, 10வது, 11வது, 12வது வீடுகள்; சுக்கிரனுக்கு 3வது, 4வது, 5வது, 7வது, 9வது,
10வது, 11வது வீடுகள் ஆகும்.
3. செவ்வாய்க்கு
உரிய நல்ல இடங்கள் முறையே, சூரியனிலிருந்து 3வது, 5வது, 6வது, 10வது, 11வது வீடுகள்
ஆகும்; இலக்கினத்திலிருந்து 1வது, 3வது, 6வது, 10வது 11வது வீடுகள்; சந்திரனிலிருந்து
3வது, 6வது, 11வது வீடுகள்; அதற்கு (செவ்வாய்க்கு) 1வது, 2வது, 4வது, 7வது, 8வது,
10வது, 11வது வீடுகள்; சனிக்கு 1வது, 4வது, 7வது, 8வது, 9வது, 10வது, 11வது வீடுகள்;
புதனுக்கு 3வது, 5வது, 6வது, 11வது வீடுகள்; சுக்கிரனுக்கு 6வது, 8வது, 11வது, 12வது
வீடுகள்; வியாசனுக்கு 6வது, 10வது, 11வது, 12வது வீடுகள் ஆகும்.
4. புதனுக்கு
உரிய நல்ல இடங்கள் முறையே, சுக்கிரனிலிருந்து 1வது, 2வது, 3வது, 4வது, 5வது, 8வது,
9வது, 11வது வீடுகள்; சனி மற்றும் செவ்வாயிலிருந்து 1வது, 2வது, 4வது, 7வது, 8வது,
9வது, 10வது, 11வது வீடுகள்; வியாழனிலிருந்து 6வது, 8வது, 11வது, 12வது வீடுகள்; சூரியனிலிருந்து
5வது, 6வது, 9வது, 11வது, 12வது வீடுகள்; அதற்கு(புதன்) 1வது, 3வது, 5வது, 6வது, 9வது,
10வது, 11வது, 12வது வீடுகள்; சந்திரனிலிருந்து 2வது, 4வது, 6வது, 8வது, 10வது, 11வது
வீடுகள்; இலக்கினத்திலிருந்து 1வது, 2வது, 4வது, 6வது, 8வது, 10வது, 11வது வீடுகள்
ஆகும்.
அடுத்து
… வியாழன், வெள்ளி, சனி அஷ்டவர்க்கம்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 – 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment