சென்ற பதிவில் அஷ்டகவர்க்கம் எவ்வாறு கணிதம்
செய்யப்படுகிறது என்பதைப் பார்த்தோம். அதில் ஒவ்வொரு கோளுக்கும் அஷ்டகவர்க்கம் செய்தல்,
பிறகு ஒன்றிணைத்து முழு அஷ்டகவர்க்கம் செய்தல் என்பன பற்றி பதிவு செய்தோம்.
இவை மட்டுமின்றி, அஷ்டகவர்க்கத்தில் மேலும்
பல சோதனைகள் செய்து, அதனை செம்மைப் படுத்துகிறார்கள். திரிகோண சோதனை, ஏகாதிபத்திய சோதனை
போன்ற கணிதங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இவைகளைத் தற்போதைய சோதிட அறிஞர்களில் பெரும்பாலோர்
பயன்படுத்துகிறார்களா என்பதே தெரியவில்லை. அஷ்டகவர்க்கம் அட்டவணையைப் பயன்படுத்துபவர்களும்
குறைவுதான்.
இதற்கான காரணம் என்னவெனில், அஷ்டகவர்க்க பலன்
என்பது அவ்வளவு துள்ளியமாக இல்லாததுதான். அஷ்டகவர்க்கத்தை ஒரு கூடுதல் கணிப்பிற்கு
பயன்படுத்திக் கொள்வதே முறையானது. அதனையே முழுமையாக கொள்ளக் கூடாது என அறிவாய்ந்த சோதிடர்கள்
பொதுவில் கூறுகின்றனர்.
ஏனெனில் அஷ்டகவர்க்கம் பலன் உரைத்தல் என்பது
கோள்களின் நகர்வு அல்லது கோச்சாரத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் செய்யப்படுகிறது.
கோச்சாரத்தின் பலனையே முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில்.[பார்க்க: இராசிபலனும்
புத்தாண்டு வாழ்த்துக்களும் எனும் பதிவு]., அஷ்டகவர்க்கத்தின் பலனை எவ்வாறு ஏற்பது
என்பதில் தெளிவற்ற நிலை உள்ளது.
இங்கு முன்பே கூறியபடி, புள்ளிகள் (பரல்கள்)
கொடுக்கும் கணிதம் என்பது எந்த அடிப்படையில் அமையப் பெற்றது, அதற்கு ஏதேனும் அடிப்படை
விதிகள் உள்ளனவா என்பது தெரியாத நிலையில், [எடுத்துக்காட்டாக, சூரியனானது சந்திரன்
இருக்கும் இடத்திலிருந்து 3,6,10,11 ஆகிய இடங்களில் நற்புள்ளிகள் கொடுக்கும் என்பதில்
அந்த 3,6,10,11 எப்படி தீர்மானிக்கப்பட்டது என்பதுபோல்], இதன் அமைப்பினை தர்க்க முறையிலோ
அல்லது வான்கணித அடிப்படையிலோ இங்கு நிரூபிக்க முடியவில்லை என்பதே உண்மை.
இருப்பினும், ஒரு முழு உணவு என்பது அனைத்து
சுவைகளும் ஒருங்கிணைந்தது என்பதுபோல், ஒரு முழு சோதிட கணிப்பு என்பது அஷ்டகவர்க்க பயன்பாடும்
இணைந்ததே என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கணிப்பு பற்றிய பதிவுகள் எழுதும்போது, அஷ்கவர்க்க
பலன் தொடர்பான கணிப்புகளையும் விரிவாக பார்க்கலாம்.
அடுத்த
பதிவில் நிச்சயம் – இராசிபலன் உரைப்பது எப்படி?
No comments:
Post a Comment