வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்தொன்று
வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்… தொடர்ச்சி
8. செவ்வாயானது தனது சொந்த திரிம்சாம்சத்தில் இருக்கும்போது பிறந்தவர், திருமணம் ஆகக் கூடியவராகவும், அதிகாரம் மிக்கவராகவும், ஆயுதங்கள் தரித்தவராகவும், நன்றாக பழகக் கூடியவராகவும், நல்ல தோற்றம் உடையவராகவும், வேலையில் இலக்கின்றி உழைப்பவராகவும் இருப்பார்.
சனியானது தனது சொந்த திரிம்சாம்சத்தில் இருக்கும்போது பிறந்தவர், நோயால் பாதிக்கப்படுபவராக இருப்பார், அவரது மனைவி அவருக்கு முன்பாக இறப்பார், தீய தொழில்கள் செய்பவராக இருப்பார், பிறரின் மனைவியைக் கவர்பவராக இருப்பார், பொறாமை குணம் கொண்டவராக இருப்பார், சொந்த வீடு, உடைகள், உதவியாளர்கள் போன்ற அனைத்தும் இருக்கும், தூய்மையற்றவராக இருப்பார்.
9. வியாழன் தனது சொந்த திரிம்சாம்சத்தில் இருக்கும்போது பிறந்தவர், செல்வந்தராகவும், புகழ்மிக்கவராகவும், மகிழ்ச்சியானவராகவும், புத்திக் கூர்மையாளராகவும், நல்ல தோற்றம் உடையவராகவும், உலகத்தால் மதிக்கப்படுபவராகவும், நோய்கள் அற்றவராகவும், நல்ல பழக்கங்கள் உடையவராகவும், ஆடம்பரமாக வாழ்பவராகவும் இருப்பார்.
புதன் தனது சொந்த திரிம்சாம்சத்தில் இருக்கும்போது பிறந்த ஒருவர் புத்திக் கூர்மையாளராகவும், நுண்கலை வித்தகராகவும், நேரம் தவறாதவராகவும், இலக்கிய எழுத்தாளராகவும், தனித்துவமான பேச்சும், தச்சுத் தொழில் போன்றவற்றில் திறமையானவராகவும், அறிஞர்களின் கருத்தினை மதித்து நடப்பவராகவும், பெருந்தொழில் தொடங்குபவரககவும், மதிப்பு மிக்கவராகவும் இருப்பார்.
வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்..தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment