வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்தொன்று
வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்… தொடர்ச்சி
10. சுக்கிரன் தனது சொந்த திரிம்சாம்சத்தில் இருக்கும்போது பிறந்த ஒருவருக்கு நிறைய குழந்தைகள் இருக்கும், நல்ல சுகமாக வாழ்வார், நோய் நொடிகள் இன்றி வாழ்வார், அனைவராலும்(1) விரும்பப்படுவார், செல்வந்தராகவும், அழகாகாவும், உடலை பேணிக்காப்பவராகவும், பல பெண்களினால் மகிழ்ச்சி அடைபவராகவும் இருப்பார்.
செவ்வாயின் திரிம்சாம்சத்தில் சூரியன் இருக்கப் பிறந்த ஒருவர், சண்டையிடுவதில் பலசாலியாக இருப்பார், அதில் சந்திரன் இருக்கப் பிறந்தவர், வேலையினை மெதுவாகச் செய்பவராக இருப்பார்.
சனியின் திரிம்சாம்சத்தில் சூரியன் இருக்கப் பிறந்த ஒருவர், தீயவராக இருப்பார், அதில் சந்திரன் இருக்கப் பிறந்தவர், கொடுந்தொழொல் புரிபவராக இருப்பார்.
வியாழனின் திரிம்சாம்சத்தில் சூரியன் இருக்கப் பிறந்த ஒருவர், நல்ல நிலையில் வாழ்வார், அதில் சந்திரன் இருக்கப் பிறந்தவர், அவர் செல்வந்தராக இருப்பார்.
புதனின் திரிம்சாம்சத்தில் சூரியன் இருக்கப் பிறந்த ஒருவர், வசதியாக வாழ்பவராக இருப்பார், அதில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் அந்த மனிதர் கற்றறிந்தவராக இருப்பார்.
சுக்கிரனின் திரிம்சாம்சத்தில் சூரியப் இருக்கப் பிறந்த ஒருவர், நல்ல அழகிய உடலமைப்புடன் இருப்பார், அதில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் அனவராலும் விரும்பப் படுபவராக இருப்பார்.
குறிப்பு: (1) வேறு ஒரு கருத்தின்படி, அவருக்கு மனைவி அமையும்.
வர்க்கங்களில் கோள்களின் பலன்கள் முற்றும்
அடுத்து பகுதி-22 - பல்வேறு யோகங்கள்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment