வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்தொன்று
வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்… தொடர்ச்சி
6. ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனானது அதன் சொந்த திரேக்காணத்தில் அல்லது நட்பு திரேக்காணத்தில்(1) இருந்தால் மிகவும் அழகானவராகவும் மிக நல்ல பழக்கவழக்கங்கள் உடையவராகவும் இருப்பார்; ஆனால், சந்திரன் பிற திரேக்காணத்தில் இருந்தால், மேலே கூறிய குணாதிசயங்களை அந்த திரேக்காணத்தின் அதிபதிக்கு உரிய குணங்களுக்கு ஏற்ப பெற்றிடுவார்(2).
பிறக்கும் நேரத்தில் சந்திரனானது வியால(பாம்பு) திரேக்காணத்தில்(3) இருந்தால் அந்த மனிதர் தீய குணங்கள் கொண்டிருப்பார். அது ஆயுத திரேக்காணத்தில்(4) இருந்தால் அந்த மனிதர் பிறரைத் துன்புறுத்தும் தொழிலைச் செய்வார்; அது சதுஷ்பாத (நான்காவது) திரேக்காணத்தில் இருந்தால்(5), அந்த மனிதர் தனது குருவின் மனைவியோடு வாழ்பவராக இருப்பார், அது பக்ஷி (பறவை) திரேக்காணத்தில்(6) இருந்தால் அந்த மனிதர் ஊர் சுற்றும் குணம் கொண்டிருப்பார்.
குறிப்புகள்:
(1) பகுதி-2, பத்தி-18-ல் கூறியபடி, பிறக்கும் நேரத்தில் நட்பு.
(2) அதாவது, அந்த அதிபதி சந்திரனுக்கு சமமாக இருந்தால் (பிறக்கும் நேரத்தில்), சராசரியான பலன்களை அனுபவிப்பார், ஆனால் அந்த அதிபதி எதிரியாக இருந்தால், பலானானது கிடைக்காது.
(3) வியால திரேக்காணங்கள்: அவை முறையே கடகத்தின் இரண்டாவது திரேக்காணம், விருச்சிகத்தின் முதல் திரேக்காணம், மீனத்தின் 3வது திரேக்காணம்.
(4) ஆயுத திரேக்காணங்கள்: அவை முறையே மேசத்தின் 1வது 3வது திரேக்காணங்கள், மிதுனத்தின் 2வது திரேக்காணம், சிம்மத்தின் முதல் திரேக்காணம், துலாத்தின் 2வது திரேக்காணம் மற்றும் கும்பத்தின் முதல் திரேக்காணம்.
(5) சதுஷ்பாத திரேக்காணங்கள்: அவை முறையே, மேசத்தின் 2வது, ரிசபத்தின் 2வது, 3வது, கடகத்தின் முதலாவது, துலாத்தின் 3வது, விருச்சிகத்தின் 3வது மற்றும் தனுசுவின் முதலாவது திரேக்காணங்கள்.
(6) பக்ஷி திரேக்காணங்கள்: அவை முறையே மேசத்தின் 2வது, மிதுனத்தின் 2வது, சிம்மத்தின் முதலாவது துலாத்தின் 2வது திரேக்காணங்கள்.
சந்திரன் இருக்கும் திரேக்காணங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குணங்களைக் கொண்டிருந்தால், அத்தகைய அனைத்து குணங்களையும் அந்த மனிதர் கொண்டிருப்பார்.
வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்..தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment