Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, July 24, 2017

ஒழுக்கமற்ற நிலை - பிருகத் ஜாதகா – 171


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி


4.     ஒருவர் பிறக்கும் நேரத்தில், சனியானது உதய இராசியில்(1) இருக்க, சுக்கிரனானது சக்கரசந்தி நவாம்சத்திலும் 7வது வீட்டிலும் இருந்தால், அதேவேளையில் 5வது வீட்டில் எவ்வித சுபக் கோள்களும் இல்லாத நிலையில் அந்த மனிதரின் மனைவி மலடியாக(2) இருப்பார். மேலும், அசுபக் கோள்களானது 12வது மற்றும் 7வது மற்றும் இலக்கின வீடுகளில் இருப்பதுடன்(3) தேய்பிறைச் சந்திரன் 5வது வீட்டில் இருந்தால், அந்த மனிதருக்கு மனைவி அமையாது அல்லது குழந்தைகள் இருக்காது.

குறிப்பு:

(1)  இதிலிருந்து தெளிவாக தெரிவது யாதெனில், உதய இராசியானது ரிசபம் அல்லது கன்னி அல்லத் மகரமாக இருக்க வேண்டும், அதன்படி 7வது வீடானது முறையே விருச்சிகம், மீனம் மற்றும் கடகமாக இருப்பது, இவைகளின் மூன்று கடைசி நவாம்ச வீடுகள் சக்கர சந்தி அல்லது ரிக்ஷசந்தி எனப்படும் (பத்தி 7, பகுதி-1).

(2)  அந்த மனிதர் மீண்டும் திருமணம் செய்துகொண்டால், அவருக்கு குழந்தைகள் உண்டு என்பது வேறு சிலரின் கருத்தாகும்.

(3)  அனைத்து மூன்று வீடுகளு அல்லது ஏதேனும் இரண்டு வீடுகள் அல்லது ஏதேனும் ஒரு வீடு – உரையாசிரியரின் கருத்துப்படி.


5.     ஒருவர் பிறக்கும் நேரத்தில், சுக்கிரன் இலக்கினத்திலிருந்து 7வது வீட்டில் இருப்பதுடன், சனி அல்லது செவ்வாயின் வர்க்கத்தில் இருப்பதுடன், சனியாலும் அல்லது செவ்வாயாலும் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் விபச்சாரம் செய்பவராக இருப்பார். மேலும், சுக்கிரனானது சனி அல்லது செவ்வாயின் வர்க்கத்தில் இருக்கும் நிலையில் அது சனி அல்லது செவ்வாயால் பார்க்கப்படுவதுடன், சந்திரன், சனி மற்றும் செவ்வாய் ஆகியவை இலக்கினத்திலிருந்து 7வது வீட்டில்  இருந்தால், அந்த மனிதரும் அவர் மனைவியும் விபச்சாரம் செய்வர். மேலும், சுக்கிரனானது சனி அல்லது செவ்வாயின் வர்க்கத்தில் இருக்க, அது சனியால் பார்க்கப்பட அல்லது செவ்வய் இலக்கினத்திலிருந்து 7வது வீட்டில் இருந்தால், அந்த மனிதரும் அவர் மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுவர். மேலும், சுக்கிரனும் சந்திரனும் ஒரு இராசியில் இருக்க, சனியும் செவ்வாயும் இலக்கினத்திலிருந்து 7வது வீட்டில் இருந்தால், அந்த மனிதருக்கு மனைவியும் கிடையாது குழந்தைகளும் கிடையாது. மேலும், ஆண் மற்றும் பெண் கோள்கள் ஒரு வீட்டில் இருக்க, சனியும் செவ்வாயும் இலக்கினத்திலிருந்து 7வது வீட்டில் இருக்க, அவை சுபக் கோள்களால் பார்க்கப்பட்டால் அந்த மனிதரின் மனைவி அவரைக்காட்டிலும் மூத்தவராக இருப்பதுடன், அந்த மனிதருக்குத் திருமணம் வயது கடந்து நடக்கும்.



தீமை தரும் யோகங்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: