Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, July 8, 2017

சூரிய-சந்திர ஓரையில் கோள்களின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 161


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்தொன்று


வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்  தொடர்ச்சி


3.     சத்தியாச்சாரியாரின் கருத்துப்படி, ஒருவர் பிறக்கும்போது கும்பம் இலக்கினமாக இருந்தால், அவர் மகிழ்ச்சியற்றவராக இருப்பார்; ஆனால் யவனரின் கருத்துப்படி, ஒருவரின் பிறப்பின்போது கும்பமானது உதய துவாதசாம்சமாக இருந்தால் அவர் மகிழ்ச்சியற்றவராக இருப்பார்(1). இந்த இரண்டாவது கருத்தானது விஷ்ணுகுப்தரால் பின்வரும் காரணத்தினால் நிராகரிக்கப்படுகிறது – இராசி சக்கரத்தின் ஒவ்வொரு இராசியும் கும்பத்தின் துவாதசாம்சம் கொண்டிருக்கிறது, அதன்படி பல்வேறு வீடுகளும் நல்ல பலனைக் கொடுக்கும் நிலையில் உள்ளன.

குறிப்பு: (1) இது ஸ்ருதகீர்த்தியின் கருத்திற்கு ஏற்புடையது.


4.     ஒற்றைப்படை இராசியின் சூரிய ஓரையில் பாவக் கோள்கள் இருக்கும்போது பிறக்கும் ஒருவர், பரந்த புகழையும், முக்கிய பணிகளை மேற்கொள்பவராகவும், அதிகாரம் மிக்கவராகவும், சொத்துக்கள் உடையவராகவும், நல்ல தோற்றம் உடையவராகவும் இருப்பார். இரட்டைப்படை இராசியின் சந்திர ஓரையில் சுபக் கோள்கள் இருக்கும்போது பிறக்கும் ஒருவர், மென்மையான குணம் கொண்டவராகவும், நல்ல தோற்றம் கொண்டவராகவும், சுகமான வாழ்க்கை வாழ்பவராகவும், அனைவராலும் விரும்பப்படுபவராகவும், புத்திக் கூர்மையாளராகவும், இனிமையாக பேசக்கூடியவராகவும் இருப்பார்,


5.     ஓரைகளானது அசுபக் கோள்களாலும் சுபக் கோள்களாலும் மேற்கூறியவாறு இருக்கப்பட்டு, வீடுகள் மாறி இருந்தால்(1)  அந்த மனிதர் மேற்கூறிய இரண்டு யோகங்களின் சராசரியான பலனை அனுபவிப்பார்; ஆனால் இரண்டு ஓரைகளும், வீடுகளும் மாறுபட்டு இருந்தால்(2), பலனானது இல்லாமல் போகும்.

குறிப்பு:
(1)  அதாவது, அசுபக் கோள்கள் சூரிய ஓரையில் இரட்டைப்படை இராசியில் இருப்பது அல்லது சுபக் கோள்கள் சந்திர ஓரையில் ஒற்றைப்படை இராசியில் இருப்பது.

(2)  அதாவது, அசுபக் கோள்கள் சந்திர ஓரையில் இரட்டைப்படை இராசியில் இருப்பது அல்லது சுபக் கோள்கள் சூரிய ஓரையில் ஒற்றைப்படை இராசியில் இருப்பது.


சிதம்பரம் அவர்களின் பின் குறிப்பு:

ஆசிரியரும் (வராகமிகிரரும்) உரையாசிரியரும் கீழ்வரும் நிலையினைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள் – ஒருவர் பிறக்கும்போது அசுபக் கோள்கள் சந்திர ஓரையில் ஒற்றைப்படை இராசியில் இருப்பது அல்லது சுபக் கோள்கள் சூரிய ஓரையில் இரட்டைப்படை இராசியில் இருப்பது எனும் நிலைகள். இத்தகைய யோகத்தில் பிறக்கும் ஒருவர், பத்தி-4ல் குறிப்பிட்ட அனைத்து பலன்களையும் சராசரியான நிலையில் பெறுவர்.


வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்..தொடரும்




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: