வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி
13. ஒருவர் பிறக்கும் நேரத்தில் சனியும் வியாழனும்
இலக்கினத்திலிருந்து 7-வது வீட்டில் இருந்தால், அந்த மனிதருக்கு சுவாசக் கோளாறு இருக்கும்.
பிறக்கும் நேரத்தில் (1) செவ்வாய் 7வது வீட்டிலும் வியாழன் இலக்கினத்திலும் அல்லது
(2) சனி இலக்கினத்திலும் செவ்வாய் 5வது, 7வது அல்லது 9வது ஆகிய ஒன்றிலும் அல்லது
(3) தேய்பிறைச் சந்திரனும் சனியும் 12வது வீட்டிலும் இருந்தால், அந்த மனிதர் மனம் பிறன்ழ்தவராகவோ
அல்லது முட்டாளாகவோ இருப்பார்.
14. ஒருவர் பிறக்கும் நேரத்தில், சந்திரன், சூரியன்
– சந்திரன், வியாழன் ஆகியவை இருக்கும் நவாம்ச அதிபதிகளில் ஏதேனும் ஒன்று அதன் நீச்ச
வீட்டில் இருந்தால் அல்லது எதிரி வீட்டில் இருந்தால் அத்தகைய மனிதர் தனது வாழ்விற்காக
பிறரிடம் கையேந்துவார். நான்கு கோள்களில் இரண்டு ஏதேனும் ஒரு நவாம்சத்தில் இருந்தால்
அவர் அடிமை வாழ்வு வாழ்வார்; மூன்று கோள்கள் அல்லது நான்கு கோள்கள் ஏதேனும் ஒரு நவாம்சத்தில்
இருந்தால், அந்த மனிதர் ஒரு அடிமையின் மகனாக இருப்பார்.
தீமை தரும் யோகங்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment