வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
பெண்களின் சாதகம்
3. ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய இராசியோ அல்லது
சந்திரன் இருக்கும் இராசியோ மேசம் அல்லது விருச்சிகமாக இருக்க, உதய திரிம்சாம்சம் அல்லது
சந்திரன் இருக்கு திரிம்சாம்சமானது செவ்வாய்க்கு உரியதாக இருந்தால், அவர் திருமணத்திற்கு முன்பே தவறியவராக இருப்பார்; அது சனியாக இருந்தால்
அவர் உடலினை விற்று வாழ்வார். அது குருவாக இருந்தால் அவர் கற்புநெறி உடையவராக இருப்பார்.
அது புதனாக இருந்தால் ஏமாற்றுக்காரராக இருப்பார்; அது சுக்கிரனாக இருந்தால் தீய குணங்கள்
கொண்டவராக இருப்பார்.
4. ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய இராசியோ அல்லது
சந்திரன் இருக்கும் இராசியோ ரிசபமாக அல்லது துலாமாக இருக்க, உதய திரிம்சாம்சம் அல்லது
சந்திரன் இருக்கும் திரிம்சாம்சமானது செவ்வாய்க்கு உரியதாக இருந்தால், அவர் தீய குணம்
கொண்டவராக இருப்பார்; அது சனியாக இருந்தால் அவர் மறுமணம் செய்துகொள்வார், அது குருவாக
இருந்தால் அவர் நற்குணங்கள் உடையவராக இருப்பார். அது புதனாக இருந்தால் அவர் இசை நாட்டியத்தில்
திறமையானவராக இருப்பார்; அது சுக்கிரனாக இருந்தால் அவர் அனைத்து நற்குணங்களும் கொண்டவராக
இருப்பதுடன், புகழ் பெற்றவராகவும் இருப்பார். மேலும் ஒரு பெண் பிறக்கும் நேரத்தில்,
உதய இராசியோ அல்லது சந்திரன் இருக்கும் இராசியோ மிதுனம் அல்லது கன்னியாக இருக்க, உதய
திரிம்சாம்சம் அல்லது சந்திரன் இருக்கும் திரிம்சாம்சமானது செவ்வாய்க்கு உரியதாக இருந்தால்,
அவர் வஞ்சகியாக இருப்பார்; அது சனியாக இருந்தால் அவர் அலித்தன்மை கொண்டவராக இருப்பார்,
அது குருவாக இருந்தால் அவர் கற்புநெறி உடையவராக இருப்பார். அது புதனாக இருந்தால் அவர்
நிறைய நற்குணங்கள் கொண்டவரால இருப்பார்; அது சுக்கிரனாக இருந்தால் அவர் காம இச்சையற்றவராக
உறவுகொள்வார்.
….பெண்களின்
சாதகம்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment