வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
பெண்களின் சாதகம்
6. உதய திரிம்சாம்சம் அல்லது சந்திரன் இருக்கும்
திரிம்சாம்சங்களாக விவரிக்கப்பட்டவைகளில் உள்ள பலன்கள் என்பது உதய இராசி அல்லது சந்திரன்
இருக்கும் இராசி இவைகளில் எது பலமிக்கதோ அதற்கேற்பவே நடக்கும்.
7. ஒரு பெண் பிறக்கும் நேரத்தில் சனி, சுக்கிரன்
ஆகியவை ஒன்றுக்கு மற்றொன்றின் நவாம்சத்தில் இருக்க, அவை ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டால்;
அல்லது உதய இராசியானது ரிசபம் அல்லது துலாமாக இருக்க, உதய நவாம்சமானது கும்பமாக இருந்தால்,
அந்த பெண் தன்னுடைய வெறித்தனமான காம இச்சையை பிற பெண்களின் மீது, ஆணைப் போல் தீர்த்துக்
கொள்வார்.
8. ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், உதயத்திலிருந்து
7வது வீட்டில் அல்லது சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து 7வது வீட்டில் கோள்கள் ஏதும்
இல்லாமல் இருப்பதுடன், அந்த வீடு பலமிழந்து எவ்வித சுப கோளின் பார்வையும் இல்லாமல்
இருந்தால்(1) அந்த பெண்ணின் கணவன் தீய செயல்கள் செய்பவராக இருப்பார். அத்தகைய 7வது
வீட்டில் புதன் அல்லது சனி இருந்தால் அந்த பெண்ணின் கணவர் ஆண்மை இழந்தவராக இருப்பார்.
(2)அத்தகைய 7வது வீடு நகர்வு(சரம்) வீடாக இருந்தால், அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டிற்கு
பயணம் செல்வார்; அத்தகைய 7வது வீட்டில் சூரியன் இருந்தால் அந்த பெண் தன் கணவனால் ஒதுக்கிவைக்கப்படுவார்;
அந்த வீட்டில் செவ்வாய் இருந்து அது அசுபக் கோள்களால் பார்க்கப்பட்டால், அந்த பெண்
இளம் வயதிலேயே விதவையாவார்; அந்த வீட்டில் சனி இருந்து அது அசுபக் கோள்களால் பார்க்கப்பட்டால்
அவர் திருமணமாகமலேயே முதுமையை அடைவார்.
குறிப்பு:
(1) அல்லது
அந்த வீட்டில் இருந்தால், உரையாசிரியரின் கருத்துப்படி.
(2) அது நிலை
(ஸ்திரம்) வீடாக இருந்தால், அவர் தமது ஊரிலேயே இருப்பார், அது பொது(உபய) வீடாக இருந்தால்
அவர் வெளி நாட்டிற்கு அடிக்கடி சென்றுவருபவராக இருப்பார்.
….பெண்களின்
சாதகம்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment