வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி
11. ஒருவர்
பிறக்கும் நேரத்தில் அசுபக் கோள்கள்(1) 9வது, 11வது, 3வது 5வது வீடுகளில் இருப்பதுடன்,
அவை சுபக் கோள்களால் பார்க்கப்படாவிட்டால், அத்தகைய மனிதர், அதில் உள்ள வலிமைமிக்க
கோளின் தன்மைக்கேற்ப செவிட்டுத் தன்மையை அடைவார்; அத்தகைய அசுபக் கோள்கள் இலக்கினத்திலிருந்து
7வது வீட்டில்(2) இருந்தால் அவருக்கு பற்களில் சிதைவு ஏற்படும்.
குறிப்பு:
(1) சூரியன்,
சந்திரன், செவ்வாய் மற்றும் சனி
(2) மேலும்
சுபக் கோள்களால் பார்க்கப்படாமல் இருந்தால்.
12. ஒருவர் பிறக்கும் நேரத்தில், கிரகணச் சந்திரன்
உதய இராசியில் இருக்க, சனியும் செவ்வாயும் முறையே இலக்கினத்திலிருந்து 5வது மற்றும்
9வது வீட்டில் இருந்தால், அவர் பேய் பிடித்த நிலையில் இருப்பார். மேலும் பிறக்கும்
நேரத்தில் கிரகண சூரியன் உதய இராசியில் இருக்க, சனியும் செவ்வாயும் இலக்கினத்திலிருந்து 5வது, 9வது
வீடுகளில் இருந்தால், அவர் தமது பார்வையை இழப்பார்.
குறிப்பு
(நிமித்திகன்): பேய் பிடித்தல் என்பது மன நிலை பிறழ்வு எனும் நிலையாகும்.
தீமை தரும் யோகங்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment