Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, August 23, 2017

சந்திரன், சூரியன், வியாழன், சனியின் வீடுகளில் பிறந்தவர்கள் -பிருகத் ஜாதகா – 182

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

பெண்களின் சாதகம்

5.     ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய இராசியோ அல்லது சந்திரன் இருக்கும் இராசியோ கடகமாக இருக்க, உதய திரிம்சாம்சம் அல்லது சந்திரன் இருக்கும் திரிம்சாம்சமானது செவ்வாய்க்கு உரியதாக இருந்தால், அவர் சுதந்திரமான மனநிலை கொண்டவராக இருப்பார்; அது சனியாக இருந்தால் அவர் தனது கணவரைக் கொலை செய்வார்; அது குருவாக இருந்தால் அவர் பல நற்குணங்கள் உடையவராக இருப்பார். அது புதனாக இருந்தால் அவர் கலைத்திறன் மிக்கவராக இருப்பார்; அது சுக்கிரனாக இருந்தால் அவர் ஒழுக்கநெறி அற்றவராக இருப்பார்.

ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய இராசியோ அல்லது சந்திரன் இருக்கும் இராசியோ சிம்மமாக இருக்க, உதய திரிம்சாம்சம் அல்லது சந்திரன் இருக்கும் திரிம்சாம்சமானது செவ்வாய்க்கு உரியதாக இருந்தால், அவர் ஆண் தன்மை கொண்டவராக இருப்பார்(1); அது சனியாக இருந்தால் அவர் முறைதவறி உறவு கொள்வார்; அது குருவாக இருந்தால் அவர் அரசரின் மனைவியாக இருப்பார். அது புதனாக இருந்தால் ஆண் தன்மை கொண்டவராக இருப்பார்; அது சுக்கிரனாக இருந்தால் அவர் கீழான மனிதரிடம் உறவு கொள்வார்.

ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய இராசியோ அல்லது சந்திரன் இருக்கும் இராசியோ தனுசாக அல்லது மீனமாக  இருக்க, உதய திரிம்சாம்சம் அல்லது சந்திரன் இருக்கும் திரிம்சாம்சமானது செவ்வாய்க்கு உரியதாக இருந்தால், அவர் பல நற்குணங்களைக் கொண்டிருப்பார்; அது சனியாக இருந்தால் உடலுறவில் பெருமளவு ஈடுபாடு காட்டமாட்டார்; அது குருவாக இருந்தால் பல நற்குணங்கள் உடையவராக இருப்பார். அது புதனாக இருந்தால் பெண்களின் அறிவுச்சுடராக இருப்பார்; அது சுக்கிரனாக இருந்தால் அவர் கற்பு நெறி தவறியவராக இருப்பார்.

ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய இராசியோ அல்லது சந்திரன் இருக்கும் இராசியோ மகரமாக அல்லது கும்பமாக  இருக்க, உதய திரிம்சாம்சம் அல்லது சந்திரன் இருக்கும் திரிம்சாம்சமானது செவ்வாய்க்கு உரியதாக இருந்தால், அவர் உடலினை விற்று தொழில் செய்வார்; அது சனியாக இருந்தால் தாழ்ந்த மனிதருடன் உறவு கொள்வார்; அது குருவாக இருந்தால் கணவரின் மீது மிக்க அன்பு கொண்டிருப்பார். அது புதனாக இருந்தால் கெடு குணம் கொண்டிருப்பார்; அது சுக்கிரனாக இருந்தால் அவர் மலடாக இருப்பார்.

குறிப்பு:
(1)  வேறு சில நூல்களின்படி, வாயாடியாக இருப்பார்.

….பெண்களின் சாதகம்.. தொடரும்

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: