இராசி மண்டலம் என்பது ஒரு நீள் வட்டப்பாதையாக இருந்தாலும், வட்டத்தின் பொது விதியான, அதன் கோண அளவானது 360o என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இராசி மண்டலத்தின் பிரிவுகள் பொதுவில் பன்னிரெண்டு என்பதால், இந்தக் கோண அளவானது, ஒரு பிரிவிற்கு 30o எனும் கணக்கீட்டில் வகுக்கப்பட்டுள்ளன.
நாம் ஏற்கனவே பதிவு செய்தபடி, வான்-புவி வெட்டுப்புள்ளியை ஆரம்பமாகக் கொண்டே, இராசி மண்டலம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதே vernal equanix புள்ளியை ஆதாராகமாகக் கொண்டுதான் சோதிடத்திலும் இராசி மண்டலம் அமையப் பெற்றிருக்கிறது. வட்டத்திற்கு ஆரம்பமும் முடிவும் இல்லையென்றாலும், தொடங்கும் புள்ளியே முடிவாகவும் இருக்கும். நமது சோதிடக் கணக்கின்படி, தொடக்கப்புள்ளியானது, ஒரு குறிப்பிட்ட விண்மீனிலிருந்தே, அதாவது மீச்சிறு வித்தியாசத்தில் vernal equanix எனும் புள்ளிக்கு அருகிலிருந்தே தொடங்குகிறது. மீச்சிறு வித்தியாசம் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
பூமி மையக் கொள்கையின்படி, பூமியிலிருந்து காணப்படும் விண்மீன் தொகுப்பின் வடிவினை பெயராகக் கொண்டு இராசி மண்டலத்தின் பன்னிரெண்டு இராசிகளும் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. விண்மீன் தொகுப்பின் வடிவுகளை உற்று நோக்கில் அவற்றின் வடிவம் நமக்கு தெரிந்த எந்த வடிவத்துடன் ஏறக்குறைய ஒப்பாக இருந்ததோ, அதன் பெயரே வழங்கப் பட்டுள்ளது.
மேலே உள்ள இராசி மண்டலத்தில், விண்மீன் தொகுப்புகளைப் பாருங்கள். அவற்றின் பெயர்களையும் பாருங்கள். ஒப்பாக இருக்கிறது அல்லவா. Ophiuchus (உச்சி) எனும் 13வது பிரிவு தற்போதையக் காலக் கட்டத்தில் நிறுவப்பட்டதால், அந்த 13வது பிரிவு சோதிட இராசி மண்டலத்தில் இடம் பெறவில்லை. இது நம்நாட்டு முறை அல்லது மேல்நாட்டு முறை ஆகிய இரண்டிலுமே விலக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment