தென்னிந்திய முறை:
“எதுவும் தேவையின் பொருட்டு கொஞ்சம் கற்பதுதான். அனைத்திலும் நிபுணத்துவம் பெறுதல் கடினம் என்பதை அனுபவம் உணர்த்தும்” என்பது அனுபவ வார்த்தைகள். சோதிடக் கணிதம் பல்வேறு முறைகளில் கணக்கிடப்பட்டாலும், நமது ஆய்விற்கு நமக்கு பயன்பாட்டில் உள்ள தென்னிந்திய முறையினையே எடுத்துக்கொள்வோம். தேவைப்படும்போது, பிற முறைகளையும் ஒப்பு நோக்குவோம்.
நமது தென்னிந்திய முறையில், சோதிட மண்டலம் என்பது, மேசம் முதல் மீனம் வரையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பன்னிரெண்டு கட்டங்கள் கொண்ட ஒரு நீள் சதுரம் அமைக்கப்பட்டு, அதில் மேலிருந்து இரண்டாவது கட்டத்தை, முதலாவதாகக் கொண்டு, இராசி மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. அது, மேசம் தொடங்கி, மீனம் வரையில் அமைக்கப்பட்டுள்ளது. [கால புருச தத்துவத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினாலும், வான் மண்டல அமைப்பே அடிப்படையாகும்]. ஆனால் பிற முறைகளிலிருந்து மாறுபட்டு, கடிகாரச் சுற்று முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
மீனம்
12
|
மேசம்
1
|
ரிசபம்
2
|
மிதுனம்
3
|
கும்பம்
11
|
இராசிகள்
|
கடகம்
4
|
|
மகரம்
10
|
சிம்மம்
5
|
||
தனுசு
9
|
விருச்சிகம்
8
|
துலாம்
7
|
கன்னி
6
|
ஆனால், மேசத்தின் தொடக்கப் புள்ளி என்பது, வான்-புவி மண்டலத்தில் உள்ள 27 விண்மீன் கூட்டங்களின், முதல் கூட்டமான அசுவினி விண்மீனை எடுத்துக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், வான் மண்டலத்தில், 28 விண்மீன்கள் கூட்டம் என முதலில் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர். 28 விண்மீன்களை, ஒரு வரையறைக்குள் 12 இராசிகளுக்கும் பகிர்ந்தளிப்பதில் கணித நுட்பச் சிக்கல் ஏற்பட்டதால், ஒரு விண்மீன் கூட்டத்தை, மற்ற இரு விண்மீன் கூட்டங்களோடு இணைத்து விட்டனர். அந்த ஒரு விண்மீன் கூட்டத்தின் பெயர் ‘அபிசித்து’ என்றும், அது திருவோணத்திற்கும் அவிட்டத்திற்கும் இடையில் இருந்ததாகவும், பின்னர் அது உதிர்ந்து விட்டதாகவும் ஏடுகள் தெரிவிக்கின்றன. உண்மையில் அந்த அபிசித்து விண்மீன் மற்ற இரு விண்மீன் கூட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பொருத்தமாக இருக்கும். எனவே, தற்போது, 27 விண்மீன்களையும், 12 இராசிகளுக்கும் பகிர்ந்தளித்து, இராசி மண்டலம் கணக்கிடப்படுகிறது. முதலில் 27 விண்மீன் கூட்டங்களின் பெயர்களைத் தெரிந்து கொள்வோம்.
27 விண்மீன் கூட்டங்களின் பெயர்த் தொகுப்பு
பெயர்
|
நல்ல தமிழில்@
|
பெயர்
|
நல்ல தமிழில்
|
பெயர்
|
நல்ல தமிழில்
|
அசுவினி
|
புரவி
|
மகம்
|
கொடுநுகம்
|
மூலம்
|
குருகு
|
பரணி
|
அடுப்புக்கொண்டை
|
பூரம்
|
கணை
|
பூராடம்
|
உடைகுளம்
|
கார்த்திகை
|
ஆரல்
|
உத்திரம்
|
உத்திரம்
|
உத்திராடம்
|
கடைகுளம்
|
ரோகிணி
|
சகடு
|
அஸ்தம்
|
ஐவிரல்
|
திருவோணம்*
|
முக்கோல்
|
மிருகசீரிசம்
|
மான்தலை
|
சித்திரை
|
அறுவை
|
அவிட்டம்*
|
காக்கை
|
திருவாதிரை
|
மூதிரை
|
சுவாதி
|
விளக்கு
|
சதயம்
|
செக்கு
|
புனர்பூசம்
|
கழை
|
விசாகம்
|
முறம்
|
பூரட்டாதி
|
நாழி
|
பூசம்
|
காற்குளம்
|
அனுசம்
|
முடப்பனை
|
உத்திரட்டாதி
|
முரசு
|
ஆயில்யம்
|
கட்செவி
|
கேட்டை
|
துளங்கொளி
|
ரேவதி
|
தோணி
|
[*அபிசித்து இணைப்புடன்] [@நல்லதமிழ்: முத்துதமிழ்-வலைப்பூ]
ஆக, இந்த 27 விண்மீன்களையும், 12 இராசிகளுக்கும் சமமாகப் பிரித்து அளித்துள்ளனர். அதாவது, ஒரு இராசிக்கு 2¼ விண்மீன் கூட்டம் எனப் பிரித்து அளித்துள்ளனர். வட்டக்கணக்கின்படி, 360o –ஐ ஒரு விண்மீன் கூட்டத்திற்கு, 13o 20’ என 27 விண்மீன் கூட்டத்திற்கும் பகிர்ந்து அளித்துள்ளனர். அதனை மேலும் நான்கு சம பாகங்களாக வகுத்து, ஒரு பாகம் 03o 20’ என விடைக்கொண்டு, மொத்தம் 108 பாகங்களாக்கி, ஒரு இராசிக்கு 9 பாகங்களை பகிர்ந்தளித்து இராசி மண்டலத்தை உருவாக்கியுள்ளனர்.
எனவே இராசி மண்டலமானது, மேசத்தில், புரவியில் (அசுவனி) தொடங்கி தொடங்கி, மீனத்தில் தோணியில் (ரேவதி) முடிவடைகிறது.
ஆனாலும், பிருகத் ஜாதகாவினை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்த திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள், ரேவதி விண்மீனில் மேச மண்டலத்தின் ஆரம்பம் இருப்பதாக எழுதியுள்ளார்.
ஆக, தென்னிந்திய முறையில், அதாவது நமது சோதிட முறைப்படி, மேசம் தொடங்கி, மீனம் வரையில் உள்ள 12 இராசிகளும், 27 விண்மீன்களின் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment